அட இது தெரியாம போச்சே ! பாகம் – 03
என்னது ஊரான் விட்டுப் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன்பிள்ளை தானா வளரும் அது எப்படிங்க? என் புள்ளையை ஊட்டி நான் வளர்த்தால் அது வளரும் என்னங்க அர்த்தம்? இதானே உங்கள் குழப்பம்.
ஒன்னு இல்ல தம்பி. எங்கேயோ இருக்க ஒரு பொண்ண திருமணம் பண்ணி அவ கற்ப காலத்துல கர்ப்பிணியா இருக்கும்போது, அவள நீ ஊட்டி வளர்த்தினா , அவள் கர்ப்பத்தில் உன் புள்ள தானாக வளரும் என்பதுதான். இதைத்தான், எல்லாரும் தப்பா புரிஞ்சுக்கிறது.
நகை ரேட் நாளுக்குநாள் ராக்கெட் வேகத்துல ஏறிகிட்டுதான் போகுது. அந்த தங்கத்தோட தரம் பத்தி பேசுறப்போ, 916-னு சொல்றாங்களே அப்படின்னா என்னனு தெரியுமா?
916 என்பது தங்கத்தின் தூய்மை அளவு. இது 22 காரட் தங்கம் என்பதை குறிக்கிறது. அதாவது, 1000 பங்கில் 916 பங்கு தூய தங்கம் (91.6% தங்கம்) மற்றும் 84 பங்கு பிற கலவை உலோகம் இருப்பது. சுருக்கமாக: 916 = 22 காரட் தங்கம் = 91.6% தூய தங்கம்.
— பேரா அருள் சா








Comments are closed, but trackbacks and pingbacks are open.