யாருமே தடுக்கல …
மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில், அந்தந்த மாநில அரசுகளே ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் கொண்டு வரலாம் என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும், அதே போல #2019ல் இராஜஸ்தான் மாநிலஅரசு கொண்டு வந்த சட்ட மசோதாவையும் சுட்டிக்காட்டி தமிழ்நாடும் இதற்கான சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முதன் முதலில் முன்வைத்து பரப்புரையை மேற்கொண்டது. சாதி ஒழிப்பு முன்னணி என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு தான் மாநில அரசே சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது திமுக அரசு அதற்கான ஆணையத்தை அமைத்திருக்கிறது.
கர்நாடகா அரசு இன்னும் ஒரு படி மேலே சென்று மசோதாவையே கொண்டு வர முடிவெடுத்திருப்பது தமிழ்நாட்டை விட முன்னோக்கி நகர்ந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
காதலை போற்றும் இச்சமூகத்தில் தான் சாதி மாறி காதலித்த, திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்திற்காக இளம் காதலர்கள் தம்பதிகள் வெட்டிப் படுகொலை செய்யப்படுகிறார்கள். அநீதி தடுக்கப்பட வேண்டும். அதற்கு சாதி ஆணவக் கொலைகள் குற்றங்கள் எதிரான சட்டமும் சமூக போராட்டமும் அவசியம் என்பதை தொடர்ந்து உரக்க பேசுவோம்.
— வ. ரமணி, சாதி ஒழிப்பு முன்னணி








Comments are closed, but trackbacks and pingbacks are open.