தேர்தல் அறிக்கை தயாரிப்பில் கனிமொழி கருணாநிதி எம்பி!
வர இருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுநலச் சங்கங்கள் – வணிக அமைப்புகள் – இளைஞர்கள் – விவசாய அமைப்புகள் – தொழிலாளர் அமைப்புகள் – பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரை சந்திக்க திமுக துணைப் பொதுச்செயலாளரும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவானது, (19/01/2026) திங்கள்கிழமை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள ஆனந்த் கிரான்ட் பேலஸில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்!
உடன், அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மாவட்ட கழகச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான மணி, சட்டமன்ற உறுப்பினருமான பிரகாஷ், மதியழகன், மாவட்ட செயலாளர் பழனியப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி, எழிலன் நாகநாதன், செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், அயலக அணி செயலாளர் அப்துல்லா, சுற்றுச் சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் மற்றும் பலர் பங்கேற்றனர்!
— மணிபாரதி









Comments are closed, but trackbacks and pingbacks are open.