முதன்முறையாக திருச்சியில் இன்று 25.01.2026 தாய்மையை போற்றும் Deltas Birthwell Expo 2026 !

முதன்முறையாக திருச்சியில் இனறு 25.01.2026 தாய்மையை போற்றும் Deltas Birthwell Expo 2026 !

திருச்சியில் முதல்முறையாக தாய்மையை போற்றும் வகையில், ” Deltas Birthwell Expo 2026”முழுநாள் நிகழ்வை நடத்தவிருக்கிறார்கள். ஜனவரி-25 அன்று, திருச்சி கோர்ட்யார்ட் பை மேரியட் (சங்கம்) ஹோட்டலில் இந்நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

பொதுவில், தாய்மார்கள் குழந்தையை பிரசவிக்கும் தருணத்தை மறுபிறவி எடுப்பதற்கு நிகராக ஒப்பிடுவார்கள். வாழ்வியல் முறை தலைகீழாக மாறிப்போய்விட்ட இன்றைய காலத்தில் பெண் தாய்மை அடைவதே பெரும் சவாலாக மாறியிருக்கிறது. ஒருகாலத்தில், கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார் என்பார்கள். இன்றோ, குழந்தையை பிரசவித்துப்பார் என்று சொல்லும் அளவுக்கு உளவியல் சிக்கலை பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.

Deltas Birthwell Expo 2026 !
Deltas Birthwell Expo 2026 !

இத்தகைய பின்னணியில்தான், , ” Deltas Birthwell Expo 2026” நிகழ்வை ஒருங்கிணைத்திருக்கிறார்கள். கர்ப்பம் ஒருபுனிதமான பயணம். குழந்தை பிறப்பு என்பது ஒரு தருணம் மட்டுமல்ல ஒருபெண் தன் வாழ்நாள் முழுவதும் உள்ளத்தில் சுமந்து செல்லும் நினைவு. ஒரு குழந்தையின் வாழ்க்கை கதையின் முதல் அத்தியாயம், சமூகத்தை வடிவமைக்கும் சக்தி அதற்கு உண்டு. பயமின்றி,  நம்பிக்கையுடன் கூடிய பிரசவம், பிரசவத்திற்குப் பிந்தைய சிகிச்சை — உடல், மனம், ஆன்மா மற்றும் மன அழுத்தமின்றி ஆதரவுடன் கூடிய தாய்ப்பால் ஊட்டம், தாய்மை தாண்டிய பெண்களின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த எதிர்கால தலைமுறைகள் உருவாக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் BirthWell எக்ஸ்போவை நடத்துகிறார்கள்.

Deltas Birthwell Expo 2026 !
Deltas Birthwell Expo 2026 !

திருமணம் முடித்து குழந்தைப்பேறுக்கான கனவோடு காத்திருக்கும் தம்பதிகளையும், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் குடும்பத்தாரையும் ஒருங்கிணைக்கும் நிகழ்வாக நடைபெறவிருக்கிறது. இந்த எக்ஸ்போ-வில் மகப்பேறியல் துறைசார்ந்த மருத்துவமனைகள், மருத்துவ நிபுணர்கள், மனநல மருத்துவர்கள் உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்று கலந்துரையாடுகிறார்கள்.

பிரசவத்திற்குத் தயாராகுதல் முதல் குழந்தைப்பேறு, குழந்தை பராமரிப்பு, கருவுற்ற தாய்மார்கள் மீதான அக்கறை செலுத்துதல், பிரசவ காலத்திற்குப் பிறகான அவர்களது உடல் நலனை பேணுதல் வரையில் அனைத்தும் உள்ளடக்கிய பிரச்சினைகள் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் தளமாக வடிவமைத்திருக்கிறார்கள். தாயையும் சேயையும் அரவணைக்கும் ஆர்கானிக் பொருட்கள், ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், முழுமையான ஆரோக்கியத்தை உத்தரவாதப்படுத்தும் மருத்துவமனைகள் மற்றும் மகப்பேறு சேவை வழங்குநர்கள் பங்கேற்கிறார்கள். இவை தொடர்பான பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இந்த எக்ஸ்போவில் பங்கேற்கின்றன.

நாட்டியம் மற்றும் தேர்ந்த கதைசொல்லி ரமா பரத்வாஜ் மற்றும் கண்களை மயக்கும் மாயவித்தைகளை நிகழ்த்த மாயக்கலை நிபுணர் கலையின் நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றது.

காலை 10 மணி முதலை இரவு 8 மணி வரையிலான முழுநாள் நிகழ்வாக நடைபெறுகிறது. அனுமதி இலவசம்.

கூடுதல் விவரங்களுக்கு 96779 43399 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.