திருச்சி அல்லூர் சீனிவாசன் மீது கந்துவட்டி, மோசடி வழக்கு பதிவு !
திருச்சி அல்லூர் சீனிவாசன் மீது கந்துவட்டி, மோசடி வழக்கு பதிவு !
திருச்சியில் அல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜேந்திரன் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த அல்லூர் சீனிவாசன் என்பவர் மீது திருச்சி மாவட்ட காவல்துறை மோசடி வழக்கு புகார் செய்துள்ளது.
இதுகுறித்து அல்லூர் சீனிவாசன் மீது புகார் செய்த திருச்சி மாவட்டம் அல்லூர் கீழத்தெருவை சேர்ந்த அல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் விஜயேந்திரன் என்பவரிடம் பேசிய போது…
நான் அல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறேன். எனக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் படித்துக்கொண்டு இருக்கிறார். முதல் மகன் மணிகண்டன் வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் எங்கள் ஊரில் உள்ள எனது வயலுக்கு செல்லும் வழியில் சீனிவாசன் என்பவர் என்னிடம் நலம் விசாரித்து மகன்கள் இருவரும் என்ன செய்கிறார்கள் என்று கேட்டார் இளைய மகன் படித்துக் கொண்டிருக்கிறார் என்றேன்.
பெரிய மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினார். அரசாங்க வேலை வாங்க மொத்தம் ஐந்து லட்சம் ஆகும் என்றார். நானும் முதல் தவணையாக ரூபாய் 3 லட்சம் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் என்னுடன் எங்கள் ஊரைச் சார்ந்த பிரபாகரன் நாகராஜ் ஆகியோர் முன்னிலையில் பணம் கொடுத்தேன். மீதி பணம் அரசாங்கம் வேலை வாங்கிய பின் தருவதாக பேசி முடித்தோம்.

இன்று வரை பணம் திரும்பவும் தரவில்லை வேலையும் கிடைக்கவில்லை 22.09.2022 காலை சுமார் 9 மணிக்கு ஊருக்கு வந்தார் பணம் கேட்டதற்கு உன்னால் முடிந்தால் வாங்கிக் கொள் என்று மிரட்டினார். எனக்கு சசிகலா உறவினர், மன்னார்குடி திவாகரன் கட்சியில் முக்கிய பொறுப்பு, திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்கள் எல்லாம் தெரியும், நானே பசும்பொன் கட்சியின் தலைவர், பத்திரிகை நடந்துக்கிறேன் மீடியா சங்கம் நடத்துகிறேன்… என்னை கண்டால் திருச்சியில் வியாபாரம் செய்யும் பெரிய பெரிய கடைக்காரர்களும் அதிகாரிகளும் நடுங்குவார்கள், நீ என்ன எனக்கு பெரிய ஆளு, நான் கை காட்டினால் உன் தலையை துண்டாக்குவது கூட என்னிடம் ஆட்கள் இருக்கிறார்கள் என்று மிரட்டினார்.
எங்க ஊர் அல்லூரில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்வதற்கு சி சீனிவாசன் என்பவர் நியமித்து பொதுமக்களிடமிருந்து வட்டி வசூல் என்கிற பெயரில் மிரட்டுகிறார். மாத வட்டி தொகை தராதவர்கள் வீட்டில் உள்ள பொருட்கள், இல்லையெனில் இரு சக்கர வாகனங்களில் எடுத்து வந்து அவர் வீட்டில் அருகே உள்ள அக்ரஹரத்தில் மூன்று வீடு அல்லது இரண்டு வீடு தூரத்தில் வீட்டுக்கு இரண்டு வண்டி விதம் நிறுத்தி வைத்துள்ளார். வந்து கேட்பவரிடம் ஆர்சி புக்கை பிடுங்கிக் கொண்டு மற்றும் வெறும் புறநோட்டில் கையெழுத்து வாங்கிவிட்டு அனுப்பி விடுகிறார்.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் பலர். அதில் ஒருவர் புகழேந்தி, கந்துவட்டி சீனிவாசன் மூலமாக வசூல் பரிவர்த்தனை எல்லாம் நடக்கிறது இதில் பெரிதும் பாதிக்கப்பட்ட புகழேந்தியின் இரண்டு சக்கர வாகனத்தின் ஆர்.சி புத்தகத்தை பிடுங்கி வைத்துள்ளார்கள்.
திருச்சி துணிக்கடை சாரதாஸ் முறையாக கட்டிடம் வில்லை என்று கட்டப்பஞ்சாயத்து செய்தும், நோட்டீஸ் அனுப்பியும் வழக்கு போட்டும் சாரதாஸ் துணிக்கடையில் பல லட்சம் பெற்றுள்ளார். மேலும் பல ஒப்பந்தம் வேலை செய்பவரிகளிடம் ஊழல் செய்கிறார் என்று கூறி , புகார் கொடுக்கிறேன் என்று கூறி பல லட்சம் மோசடி செய்துள்ளார். இவருக்கு வேறு எந்த தொழிலும் இல்லை இவருக்கு தொழிலே இதுதான் என்னைப்போல் ஏமாற்றுபவர்களின் பணத்தில் கருமண்டத்தில் 80 லட்சம் மதிப்பில் வீடு கட்டியுள்ளார். அவருடைய மகனை வெளிநாட்டில் இலட்சக்கணக்கில் செலவு பண்ணி டாக்டருக்கு படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறார்.அல்லூர் சீனிவாசனை விசாரித்தால் பல விசாரணை பல உண்மைகள் வெளியே வரும் எனது 3 லட்சம் பணம் மீட்டு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலில் புகார் கொடுத்தேன். நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நான் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்தவுடன், அவசர அவசரமாக பணம் தராதவர்களிடம் புடிங்கி வைத்திருந்த டூவிலர்களை திரும்ப கொடுத்து வருகிறார். இவர்.. பணம் தரவில்லை என்று 5 இலட்சம் கொடுக்க வேண்டும் என்று செக் கேஸ் போட்டு ஒருவரை மிரட்டிக்கொண்டு இருக்கிறார். இவரால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பல பேர் இருக்கிறார் என்றார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அல்லூர் சீனிவாசனிடம் பேசினோம்… எங்க ஊரில் எங்க அண்ணனுக்கும் எனக்கும் பேச்சுவார்த்தை இல்லை, எங்க அண்ணனுக்கும், இந்த ஊராட்சி மன்ற தலைவர் விஜேந்திரனுக்கு இடையே தேர்தல் முன்விரோதம் இருக்கிறது. விஜேந்திரனுக்கு பையன் இருக்கிறன் என்பதே எனக்கு தெரியாது… அவர்களுக்குள் உள்ள பிரச்சனையில் என் மீது பொய்யான புகார் கொடுத்து இருக்கிறார். அப்பாவின் சொத்து எனக்கு நிறைய இருக்கிறது. அதை வைத்து தான் தற்போது வீடு, என் பையனின் படிப்புக்கு செலவு செய்து கொண்டு இருக்கிறேன். கந்துவட்டிக்கு எனக்கும் சம்மந்தம் இல்லை, பொய் புகாரை விசாரிக்க சொல்லி ஐஜியிடம் புகார் கொடுத்திருக்கிறேன். என்றார்.
உண்மை என்றால் வெளியே வந்து தானே ஆகும்…