தஞ்சையின் பெருமையை பறைசாற்றும் தலையாட்டி பொம்மை!
இன்று உலக பொம்மை தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சோழ தேசமான தஞ்சையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகில் தலையாட்டி பொம்மை தயார் செய்து உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு தஞ்சையில் இருந்து வெளிநாடுகள் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்கள் என ஏற்றுமதி செய்து வருகின்றனர். தஞ்சைக்கு தினம் தினம் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகள் தஞ்சையின் தலையாட்டி பொம்மையை வாங்கிச் செல்லாமல் இருந்ததில்லை.
இந்த தலையாட்டி பொம்மையின் சிறப்பு அம்சங்களை எடுத்துரைக்கும் விதமாக தஞ்சை தலையாட்டி பொம்மை மற்றும் வியாபாரிகள் நல சங்க தலைவர் ஜே.கே. ஜெயக்குமார் கூறியதாவது,
தலையாட்டி பொம்மை செய்முறைகளில் அனுபவங்கள் பற்றி ஏராளமான செய்திகளை வெளிப்படுத்தலாம் இருந்தபோதிலும் உலக நாடுகளில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரசித்தி பெற்றது. அதை தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகில் ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் விதமாக அவர்களுக்கு வருமானம் ஈட்டும் விதத்திலும் செய்து உலக மக்கள் இயக்க செய்துள்ளோம் என்பதை தஞ்சை மாவட்டம் பெருமிதம் கொள்கிறது.
இன்று உலக மக்கள் அனைவராலும் ஜூன் 10-ஆம் தேதி உலக பொம்மை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை ஒட்டி தஞ்சையின் பெருமையை பறைசாற்றும் விதமாக தலையாட்டி பொம்மை தயாரிப்பு தொழிலில் ஈடுபடும் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.