மதுரை – கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு 1500 மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பெண் வழக்கறிஞர் !
மதுரை கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு 1500 மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய உயர்நீதிமன்ற வழக்கறிஞருக்கு குவியும் பாராட்டு சால்வை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பெண்கள் அரசியல் நோக்கம் இல்லாமல் பொதுமக்கள் நலன் கருதி சேவை செய்வதாக வழக்கறிஞர் பேட்டி.
ஜெருசலேமில் பிறந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெரு விழாவாக கோலாகலமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட எல்லிஸ் நகர் பகுதியில் மாபெரும் கிறிஸ்மஸ் பெருவிழா மற்றும் புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோலாலமாக நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வரும் பெண் வழக்கறிஞர் பிரிஸ்சில்லா ஜான்சி திருநெல்வேலி மாவட்டத்தை பூர்விமாகக் கொண்டிருந்தாலும் பிறந்தது முதல் தன்னுடைய இளமை காலம் வரை தான் வாழ்ந்து வந்த போடி ரயில்வே லைன் பகுதியில் …உள்ள அனைத்து மக்களிடம் நன் மதிப்பை பெற்றவர். இவா் அப்பகுதியில் நடைபெறக்கூடிய அனைத்து சமுதாய விழாக்களிலும் கலந்து கொண்டு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.
காவல்துறையினர் அனுமதி பெற்று மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள (இரண்டாவது பால் பூத் ஸ்டாப்) பிரம்மாண்ட மேடை அமைத்து, ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வரும் இவர் உலகமே கொண்டாடக்கூடிய கிறிஸ்துமஸ் விழாவை தன் பகுதியில் இருக்கக்கூடிய அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில், நலத்திட்ட உதவிகளை வழங்கி பரிசுப் பொருட்களையும் கொடுத்ததோடு மட்டுமல்லது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் .
மேடையிலே வழக்கறிஞர் பேசுகையில் ..
நான் உங்களில் ஒருத்தி உங்களுக்காக ஒருத்தி உங்களுக்காக ஒரு பிரச்சனை என்றால் நான் வரத்தான் செய்வேன், என்னால் முடிந்தவரை நான் உதவி செய்வேன். திருவள்ளுவர் கூறுவது போல பிற உயிர்கள் படும் துன்பத்தை தன் துன்பம் போல உணர்ந்து உதவாவிட்டால் அவனுக்கு அறிவு இருந்தும் என்ன பிரயோஜனம் என்று சொல்லுவார் அதன் அடிப்படையில் என் மக்கள் துன்பப்படும்போது அவர்களுக்காக அவர்களுடைய துன்பத்தை உணர்ந்து என்னால் முடிந்தவரை உதவி செய்வேன் ……
கற்பி புரட்சி செய் ஒன்று சேர்…என்ற வரிகளுக்கு இணங்க ….வெள்ளையனை எதிர்த்து வீரமாக போராடி … நேதாஜி இடம் வீரத்தையும் வேலுநாச்சியாரிடம் துணிவையும் பெற்ற ஒரு பெண்மணியாக இன்று உங்களிடத்தில் இங்கு உள்ளேன். நம்மால் இயன்றவரை பிறருக்கு உதவுவோம் உதவி செய்து கொண்டே இருப்போம் என்றார்
தொடர்ந்து மேடையிலே அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சால்வை அணிவித்து தங்களது நன்றிகளை தெரிவித்தனர் …
பேண்ட் சர்ட் அணிந்து புல்லட்டிலே எப்போதும் சிங்கப்பெண்ணாக வலம் வரும் பிரஸ்சில்லா ஜான்சி உண்மையிலேயே ஒரு சிங்கப்பெண் தான் என்கின்றனர் அப்பகுதி மக்கள்
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
குறிப்பு… -அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மத்திய தொகுதியில், எந்தவித அரசியல் பின்புறமும் இல்லாமல் எம் மக்களுக்காக நான் உதவி செய்கின்றேன் என்று களத்தில் இறங்கி இருக்கிறார் வழக்கறிஞர் ….
வரும் காலங்களில் மாமன்ற உறுப்பினருக்கோ அல்லது வேறு ஏதேனும் அரசியல் பதவிக்கு இவர் போக போகிறாரா? என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள் ….
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.