தேடி வைத்த மரியாதையை ஒரே நாளில் இழந்த நண்பர்!
“ஸ்கோப்” தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் என்று அறியப்பட்ட பத்மஸ்ரீ மாராச்சி சுப்புராமன் எனது நீண்ட கால நெருங்கிய நண்பர். இன்று ஒரு அதிர்ச்சி. இவர் நேற்று திருச்சியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி பொதுக்கூட்டத்திற்கு தலைமை வகித்ததாக செய்தி.
தொண்டு நிறுவனங்கள் அரசியல் சார்பற்றவை. இவர் எப்படி ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத்தில்? யாராவது ஒரு ஆர்.எஸ்.எஸ்காரர் சிபாரிசுடன்தான் இவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததோ எனும் சந்தேகம் வருகிறது. இவரது பூர்வீகம் கரூர் மாவட்டம் புதுப்பட்டி. ஒரு சாதாரண விவசாயக் குடும்பம். இவர் ஆசிரியர் வேலைக்குப் படித்துவிட்டு “சேவை” கோவிந்தராஜு வழிகாட்டுதலில் விஆர்ஓ எனும் வெளிநாட்டு தொண்டு நிறுவனத்தில் வேலைக்குப் போனார். அந்த அனுபவத்தில் ஸ்கோப் எனும் தொண்டு நிறுவனத்தை துவக்கினார். இப்போது செழிப்பாக இருக்கிறார். வீடு, நிலங்கள், கார் என வசதிக்குக் குறைவில்லை.
அடிப்படையில் ஒழுக்கம், நல்ல பண்புகள் கொண்ட சுப்புராமன் படிக்கிற காலத் தில் இருந்து காமராஜ் பக்தர். காங்கிரஸ் ஆதரவாளர். நிறைய கிராமங்களில் காங்கிரஸ் கொடிகளை ஏற்றிய வர். இவர் எப்படி இப்போது ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராக மாறினார்? மாராச்சி சுப்புராமன் தன் வாழ்நாளில் செய்துவிட்ட மிகப்பெரிய தவறு இது. ஒதுக்க முடியாத, மன்னிக்க முடியாத தவறு.
எனக்கு இது தாங்க முடியாத அதிர்ச்சி. இவர் எப்படி இத்தனை காலம் எனது நண்பராக…? இதற்கு என்ன தேவை இவருக்கு? இந்த ஆர்.எஸ்.எஸ், பாஜக மோடியின் ஆட்சி எத்தனை காலம் இருக்கும்? நாம் இன்னும் எத்தனை காலம் வாழ்வோம்? அதற்குள் இப்படி கேவலப்பட வேண்டுமா? சுப்புராமன். இதுவரை தேடி வைத்த மரியாதையை ஒரே நாளில் இழந்துவிட்டாரே. இவர் எனது நண்பர் என்பதில் நான் இன்று வெட்கப் படுகிறேன்.
காந்திஜியைக் கொன்ற ஒரு தத்துவத்தின் பாதையில் சுப்புராமன்? எனது நெருங் கிய நண்பரை பற்றி இப்படிப் பதிவிடுவதற்கு மனம் வலிக் கிறது. தவறுகளை சகித்துக் கொள்ளும் குணம் எனக்கு இல்லை.
– ஜவஹர்ஆறுமுகம்,
மூத்த பத்திரிகையாளர்