தமிழர் கோயில்களில் இறைப்பணிக்கு மாபெரும் வாய்ப்பு! முற்றிலும் அரசு செலவில்! பயிற்சி முடிந்தவுடன் அரசு பணி வாய்ப்பு !
தமிழர் கோயில்களில் பாலின சமத்துவத்தோடு இறைப்பணிக்கு மாபெரும் வாய்ப்பு!
முற்றிலும் அரசு செலவில்!
பயிற்சி முடிந்தவுடன் அரசு பணி வாய்ப்பு!
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சர்கள் சங்கம்
128, கோகுலம் இல்லம், அரசமரத் தெரு திருவண்ணாமலை மாவட்டம்
90474 00485.
………………………………………………………………………………………
தமிழர் கோயில்களில் பாலின சமத்துவத்தோடு இறைப்பணிக்கு மாபெரும் வாய்ப்பு!
முற்றிலும் அரசு செலவில்!
பயிற்சி முடிந்தவுடன் அரசு பணி வாய்ப்பு!
தமிழ்நாட்டில் நிறுவனமயமாக்கப்பட்ட கோவில்களில், அர்ச்சகர் பணி நியமனம் என்பது எல்லோராலும் பெறக்கூடிய ஒன்றல்ல. அந்தந்தக் கோவில்களில் வழிவழியாக அர்ச்சனை செய்துவந்தவர்களே இந்தப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
எல்லா இந்து சாதியினரும் கோவில்களில் இறைவனின் திருமேனியைத் தொட்டு பூசை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கருத்து நீண்ட காலமாகவே வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில்,
1970களின் துவக்கத்தில் இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் பெரியார்.
இதையடுத்து, இதற்காக அனைத்து இந்துக்கள் அர்ச்சகர் சட்டத்தை இயற்றினார் அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி. இதற்குப் பிறகு, பல தடைகளைத் தாண்டி 2006ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்படலாம் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது.நீதிமன்ற தடையால் நியமனம் நடக்கவில்லை.
2021-ல் கோயில் கருவறைக்குள் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக பணியில் அமர்த்தி ஆலயங்களில் சமூக நீதியையும் சமத்துவத்தையும் நிலைநிறுத்தினார் திராவிட நாயகன் ஸ்டாலின் அவர்கள்.
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் இணைந்து மீண்டும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் திறக்க கோரிக்கை வைத்தோம்.
எங்களுடைய கோரிக்கையை ஏற்று தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் திறக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
சென்னை பார்த்தசாரதி கோவில், திருவரங்கம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும், மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளும் திறம்பட செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சேர தகுதிகள் எளிதுதான்:
இந்த பயிற்சி பள்ளியில் பாடத்திட்டங்கள் தமிழ் முறைப்படி மற்றும் சமஸ்கிருத முறைப்படியும் அனைத்து விதமான பாடத்திட்டங்களும் இதில் நடத்தப்பட்டு வருகின்றன.
அனைத்து விதமான ஆகம முறைப்படி காரண ஆகமம் காமிக ஆகமம், குமார தந்திரம் போன்ற அனைத்து விதமான ஆகமம், தமிழ் முறைப்படி தேவாரம் திருவாசகம் திருமந்திரம் மற்றும் அனைத்து விதமான கடவுளுக்கான பூஜை முறைகள், காண மந்திரங்கள் முறைப்படிகற்றுத் தரப்படுகிறது.
வைணவ முறைப்படி, வைகானஸ ஆகாம் பாஞ்சராத்ர ஆகாம் வைண முறைப்படியான ஆகமங்களும், அஷ்டோத்திரம் தியான ஸ்லோகங்கள் புண்ணியாக வசனம் பஞ்சசுத்தங்கள் திருவாரா தனக்கிராமம் நித்யானு சந்தானம் முக்கிய திருக்கோயில்களில் வழக்கத்தில் உள்ள பூஜை முறைகளையும் கற்றுத் தரப்படுகின்றன
சோதிடம், செய்முறை அனைத்து விதமான பூஜை முறைகளை கற்றுத் தரப்படுகின்றன.
சேர தகுதிகள் எளிதுதான்:
இந்து சமய கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு 14 வயது முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
உணவு, தங்குமிடத்துடன் மாதம் ரூ. 4,000/உதவித் தொகை வழங்கப்படும்
ஓராண்டு இலவச பயிற்சி
அமைவிடங்கள் மற்றும் விபரங்களுக்கு :
மதுரை மாவட்டம், மதுரை,
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயில்
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்),
தொடர்பிற்கு – 04522344360, 9788171170
திருவண்ணாமலை மாவட்டம்,
திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில்
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்), தொடர்பிற்கு – 04175252438, 6379149192
தூத்துக்குடி மாவட்டம்,
திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்),
தொடர்பிற்கு – 04639242221, 9442053394
திண்டுக்கல் மாவட்டம்,
பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (சைவம்)
தொடர்பிற்கு – 04545242236, 7010845219
சென்னை மாவட்டம்,
திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்),
தொடர்பிற்கு – 04428442462, 7305633101
திருச்சி மாவட்டம்,
ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்காநாதசுவாமி திருக்கோயில்
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்),
தொடர்பிற்கு – 04312432246, 9443398769
திருவள்ளுர் மாவட்டம்,
ஸ்ரீபெரும்புதூர், அருள்மிகு ஆதிகேசவ பாஷ்யகார சுவாமி திருக்கோயில்
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி (வைணவம்)
தொடர்பிற்கு– 04427162236, 9444854650
http://Website : https://hrce.tn.gov.in
சிறுவயதில் இருந்தே கோயிலில் அர்ச்சகராக வேண்டும் என்று விருப்பப்பட்ட மாணவர்களுக்கு தற்போது துவங்கப்பட்டுள்ள பயிற்சி பள்ளி மாபெரும் வாய்ப்பு.
தமிழகத்தில் கோயில் கருவறையில் தமிழனும் தமிழும், பாலின பாகுபாடு இன்றி அனைவரும் பூஜை செய்ய வேண்டும் என்பதற்கான முயற்சி தான் இது. இந்த பயிற்சி பள்ளியில் ஆண்களும் பெண்களும் அனைவரும் இணைந்து படிக்க ஒரு அரிய வாய்ப்பு
பயிற்சி பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்களை சேர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ் சமூக ஆன்மீக அன்பர்களே, இளைஞர்களே
இறைப்பணிக்கு இன்றே இணைவீர்!
வா.ரங்கநாதன், தலைவர்
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு.
தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சர்கள் சங்கம்
தொடர்புக்கு : 9047400485