துறையூரில் முறுக்கு மொத்த விற்பனையாளர்களான கணவன் மனைவி கடன் தொல்லையால் தற்கொலை முயற்சி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ணவன் பரிதாபமாக சாவு ! உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவிக்கு தீவிர சிகிச்சை !

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த அரசு மருத்துவமனை அருகே உள்ள முத்து நகரை சேர்ந்தவர் சுரேஷ்(45) இவரது மனைவி சங்கீதா வயது 37 இருவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் இல்லை என தெரிகிறது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

கணவன் மனைவி இருவரும் வீட்டிலேயே முறுக்கு மிச்சர் இனிப்பு பலகாரம் செய்து துறையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனை செய்து வந்துள்ளனர் இந்நிலையில் தொழிலுக்காக தெரிந்த இடங்களில் கடன் அதிகமாக பெற்றதாக கூறப்படுகிறது.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு மிரட்டியதாக  கூறப்படுகிறது இதனால் மனமுடைந்த கணவன் மனைவி இருவரும் வீட்டிலேயே காய் நறுக்கும் கத்தியால் தனக்குத்தானே இருவரும் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி ஈடுபட்டனர் கழுத்தில் ரத்த காயங்களுடன் கணவன் மனைவி இருவரும் வலி தாங்காமல் கதறி உள்ளனர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இவர்களின் அலறல் குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று இருவரையும் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலன் இன்றி சுரேஷ் பரிதாபமாக உயிர் இழந்தார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

துறையூர் பகுதியில் கடன் தொல்லையால் கணவன் மனைவி இருவரும் தற்கொலை முயற்சி ஈடுபட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது பற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.