சரண்டர் ஆகும் திமுக புள்ளி ! வசமாக சிக்க வைத்த அமைச்சர் ?
முன்ஜாமீன் தள்ளுபடி சரண்டர் ஆகும் திமுக புள்ளி ! வசமாக சிக்க வைத்த அமைச்சர்?
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில், டிசம்பர் 27 அன்று தரிசனத்தின்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் இன்ஸ்பெக்டர் காந்திமதியை, தி.மு.க பிரமுகர் இரா.ஸ்ரீதரன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் காந்திமதி புகாரளித்தார்.
புகாரின்பேரில், தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், திருவண்ணாமலை நகராட்சியின் முன்னாள் தலைவருமான ஸ்ரீதரன், மற்றும் அவரின் துணைவியார் சிவசங்கரி, கோயில் ஊழியர் கே.ஆர்.ரமேஷ் ஆகிய 3 பேர்மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தாக்கப்பட்ட காந்திமதி, இன்ஸ்பெக்டராகப் பணி உயர்வுப் பெற்று 6 மாதங்கள் தான் ஆகின்றன இந்த நிலையில் தேசூர் காவல் நிலையத்தையும் கூடுதலாகக் கவனித்துவந்தார். இந்தச் சம்பவத்தால், மன உளைச்சலுக்கு ஆளாகி, விடுப்பில் சென்றுவிட்டார் கடந்த 4, ந்தேதி வேலூர் மாவட்ட தீவிர குற்றப்பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில், தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் முன்ஜாமீன் கேட்டு, திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு 9 ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரே, ‘‘இன்ஸ்பெக்டரைக் கூட்டத்தில் முகம் தெரியாத வேறு யாரோ தாக்கிவிட்டார்கள்” என்று வாதத்தை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில், இடை மனுதாரராக ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் என்பவர் குறுக்கிட்டு, பாதிக்கப்பட்ட பெண் ஆய்வாளர் தனது புகாரில் ‘கண்ணீர் மல்க வேண்டுகிறேன்’ எனக் குறிப்பிட்டு, தன்னை யார் தாக்கினார்கள் எனவும் மிகத்தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக் காவல்துறை எந்த அளவுக்கு ஒரு காவல் ஆய்வாளரின் புகாரைக் கையாளுகிறது’’ என்பதை எடுத்துச் சொன்னார். இதையடுத்து, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த விசாரணை அதிகாரியான திருவண்ணாமலை டவுன் இன்ஸ்பெக்டர் சுபாவை அழைத்து, ‘என்ன நடந்தது’ என நீதிபதி கேள்வியெழுப்பினார். மனுதாரர் தாக்கியது உண்மை தான்’ என்றார் . இதையடுத்து, ” சரண்டர் ஆக சொல்லுங்க அப்புறம் பெயிலுக்கு வாங்க ”
என கூறி , தி.மு.க பிரமுகர் ஸ்ரீதரனின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார் நீதிபதி , இந்த சம்பவத்தால் தர்மசங்கடத்திறக்கு ஆளாகி உள்ளனர் திருவண்ணாமலை திமுகவினர்
மேலும் நம்மிடம் கூறிய இரா.ஸ்ரீதரன் ஆதரவாளர் ஒருவர் அமைச்சர் எ.வ.வேலு தான் முன் ஜாமீன் கிடைக்க கூடாது என்று தடையாக இருக்கிறார் என்றும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கேட்டுள்ளார் தலைமையும் இவருக்கு கிரீன் சிக்னல் கொடுக்க இருந்த நேரத்தில். ஸ்ரீதரன் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு வந்துவிட்டது. அடித்ததாகவே இருந்தாலும் அமைச்சர் நினைத்து இருந்தால் அண்ணனை காப்பாற்றி இருக்கலாம் என்றும் எங்க தன் மகனுக்கு சீட் கிடைக்காமல் போய்விடுமோ என்று எண்ணி வசமா மாட்டி விட்டார்கள் என்கின்றார்.
நாராயண திருப்பதி முகநூலில்
சாதாரண முகநூல் பதிவுகளுக்கே நட்ட நடு நிசியில் வீடு புகுந்து கைது செய்யும் காவல்துறை இதுவரை ஸ்ரீதரை கைது செய்யாது இருப்பது, காவல் துறையை பலவீனமாக்கும் என்பதை உணர வேண்டும். காவல் துறை தன் கண்ணியத்தை, மாண்பை, மரியாதையை தக்க வைத்து கொள்ள வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் இந்த விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக சொல்லப்படுகிறது. என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இரா.ஸ்ரீதரன் எண்ணிற்கு அவரது கருத்தை அறிய முயற்சித்தோம் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது என்று பதிலாகவே இருக்கிறது.
– மணிகண்டன்