ஆறு தலைமுறையாக … பொங்கல் பண்டிகையை கொண்டாடாத அதிசய கிராமம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஆறு தலைமுறையாக, முன்னோர்கள் கூறிய ஐதீகத்தை நம்பி டிஜிட்டல் காலத்திலும் கொண்டாட்டத்தை தவிர்த்து வருகிறார்கள் என்பது, உண்மையில் அதிசயிக்கத்தான் வைக்கிறது.

தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை நாளை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். ஆனால், கடந்த ஆறு தலைமுறையாக பொங்கல் வைக்காமல் பண்டிகையை கொண்டாடாத அதிசய கிராமம் ஒன்று தமிழகத்தில் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

கேளையாப்பிள்ளையூர் கிராமம்
கேளையாப்பிள்ளையூர் கிராமம்

அந்தக் கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வசித்த பொதுமக்கள் முன்னொரு நாளில் பொங்கல் பண்டிகை அன்று பொங்கல் வைத்ததாகவும்; அப்போது பொங்கல் பொங்கி வராமல் முன்கூட்டியே உலை கொதித்ததாகவும் கூறப்படுகிறது. பொங்கல் நுரைத் தள்ளி பொங்கினால் தான் அந்த பொங்கலை போல் மக்களின் வாழ்க்கையும் இன்பத்தில் பொங்கி செழிக்கும் என்பதை ஐதீகம். ஆனால், பொங்கல் பானை பொங்காமல் உலை கொதித்ததால் அதை அபசகுணமாகவும் தெய்வ குத்தமாகவும் கருதி அன்று முதல் தங்கள் ஊரில் பொங்கல் கொண்டாட கூடாது என அந்த கிராமத்து மக்கள் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

கேளையாப்பிள்ளையூர் கிராமம்

கேளையாப்பிள்ளையூர் கிராமம்

மேலும், அந்த கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும் தை மாதம் திருவிரா நடைபெறும். எனவே, திருவிழா நேரத்தில் அம்மனுக்கு பொங்கல் வைக்காமல் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்ததன் காரணமாக தான் இது போன்ற அபச குணம் ஏற்பட்டதாகவும் இந்த ஊர் மக்கள் நம்புகின்றனர். எனவே, காலம் காலமாக தங்கள் முன்னோர்கள் கூறியதை கடைபிடித்து டிஜிட்டல் காலமான தற்போது வரை இக்கிராம மக்கள் பொங்கலை கொண்டாடுவதில்லை.

அதன்படி பொங்கல் அன்று தங்கள் வீடுகளின் முன்பு யாரும் இங்கு பொங்கல் பானை வைத்து வழிபடுவதில்லை. நாடே பொங்கல் கொண்டாட்டத்தில் திளைத்து இருந்தாலும் கூட இக்கிராம மக்கள் மட்டும் பொங்கல் அன்று எந்த ஒரு ஆரவாரமும் கொண்டாட்டமும் இல்லாமல் அமைதியாக இருந்து வருகின்றனர். அன்றைய தினம் வீடுகளில் முன்பு கரும்புகளால் அலங்கரிப்பது பொங்கலுக்கே உரித்தான விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தாமல் இருப்பது என எந்த ஒரு கொண்டாட்டத்திலும் ஈடுபடுவது இல்லையாம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, ”நாங்கள் கடந்த ஆறு தலைமுறைகளாக பொங்கலை கொண்டாடுவதில்லை. ஒரு முறை பொங்கல் வைத்தபோது பொங்கல் பானை பொங்காமலே உலை கொதித்ததாகவும் அது தெய்வ குற்றம் என்பதால் பொங்கல் கொண்டாடக்கூடாது என எங்கள் முன்னோர்கள் தெரிவித்தனர். அதை கடைபிடித்து தற்போது வரை பொங்கலை கொண்டாடுவதில்லை.

ஆனால், அவரவர் வீட்டில் மட்டும் அடுப்பில் பாயாசம் வைப்பார்கள். மற்றபடி தெருவில் பொங்கல் பானை வைத்து நாங்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட மாட்டோம். யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. ஒட்டுமொத்தமாக ஊர் மக்களே இந்த ஐதீகத்தை நம்பி பொங்கலை கொண்டாடாமல் இருக்கின்றனர்” என்று கூறினார் .

கேளையாப்பிள்ளையூர் கிராமம்
கேளையாப்பிள்ளையூர் கிராமம்

ஆண்கள் இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்ததால் தங்கள் முன்னோர்களின் ஐதீகத்தை கடைபிடித்தாலும் கூட, பிற ஊர்களில் இருந்து திருமணம் ஆகி வந்த பெண்கள் நமது பாரம்பரிய திருவிழாவான பொங்கலை கொண்டாட வேண்டும் என பெரிதும் விரும்புகின்றனர்.

இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந சங்கீதா கூறும் போது, ”நான் பிறந்த ஊரில் பொங்கல் கொண்டாடுவோம். ஆனால், இங்கு பொங்கல் கொண்டாடுவதில்லை. இது குறித்து பெரியவர்களிடம் கேட்டபோது சில காரணத்தை கூறினார்கள். இருந்தாலும் தற்போதுள்ள காலத்தில் தமிழக பாரம்பரிய திருவிழாவான பொங்கலை கொண்டாட வேண்டும் என்று தானே எனது விருப்பம் கடவுள் நம்பிக்கை இருக்கலாம்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால், மூடநம்பிக்கை இருக்கக் கூடாது. எனவே, வரும் காலங்களில் எங்கள் ஊரிலும் பொங்கல் கொண்டாட வேண்டும் என்பது தான் எங்களின் ஆசை எங்கள் ஆசையை ஊர் பெரியவரிடம் கூறியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

அட, அந்த அதிசய கிராமம், அதுவும் நம்ம தமிழகத்தில் எங்குதான் இருக்கிறது? என்ற எதிர்பார்ப்பும் ஆச்சர்யமும் மேலிடுகிறதா? நம்ம தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள கேளையாப்பிள்ளையூர் என்ற கிராமம்தான், அந்த அதிசய கிராமம்!

 

—  மணிபாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.