அங்குசம் சேனலில் இணைய

பாரீஸ் நகரத்தை போல சீனாவில் இருக்கும் ஓர் அடடே கிராமம்!

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பொதுவாக நம் ஊர்களில் எல்லாம் ஒரு டூப்ளிகேட் மாடலை திட்ட வேண்டும் என்றால் சீனா மாடல் என்று உதாரணமாக குறிப்பிட்டு சொல்லுவார்கள். அந்த அளவிற்கு சீனா என்றாலே ஒரு பொருளைப் போல டூப்ளிகேட் செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்று நமக்கு தெரியும். ஆனால் அவர்களால் ஒரு நகரத்தையே டூப்ளிகேட்டாக உருவாக்க முடியும் என்று நாம் அறிந்திருக்க மாட்டோம். அதையும் தற்போது நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் சீனர்கள்.

தியாண்டுசெங் கிராமம்
தியாண்டுசெங் கிராமம்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

சீனாவில் அமைந்துள்ள தியாண்டுசெங் கிராமம், பாரீஸின் அழகைப் பிரதிபலிக்கும் வகையில் பாரீசை போலவே உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கிய இந்த திட்டம், பிரான்ஸின் தலைநகரான பாரீஸைப் போலவே இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த கிராமத்தின் சிறப்பு அம்சமே பாரீஸில் இருக்கும் ஈபில் டவரை போல இங்கே அமைந்திருக்கும் 108 மீட்டர் உயரமுள்ள ஈபிள் டவரின் மாதிரி தான், மேலும் இது உலகின் இரண்டாவது பெரிய ஈபிள் கோபுர பிரதியாகும். பாரீஸின் சாம்ப்ஸ்-எலிசீஸ், வெர்சாய்ஸ் தோட்டங்கள் மற்றும் பரோக் நீரூற்றுகள் என பாரீஸின் சில முக்கிய அம்சங்களை இந்த கிராமத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆரம்பத்தில் 10,000 பேர் வசிக்கும் வகையில் திட்டமிடப்பட்ட கிராமம், பின்னர் 2013 ஆம் ஆண்டு குறைந்த மக்கள் தொகையால் உள்ளூர் பொதுமக்களால் “பேய் நகரம்” என்று அழைக்கப்பட்டதாம். அப்போது வெறும் 2,000 பேர் மட்டுமே வசித்தனர். ஆனால் 2017ஆம் ஆண்டு மக்கள் தொகை 30,000 ஆக உயர்ந்தது. இருந்தாலும், பல அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கடைகள் இன்னும் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

தியாண்டுசெங் கிராமம்
தியாண்டுசெங் கிராமம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இதற்கு முக்கிய காரணம், இந்த கிராமம் ஹாங்ஸோவின் மையப்பகுதியிலிருந்து 40 நிமிட தொலைவில், பொது போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள பகுதியில் அமைந்திருப்பது தான். இருப்பினும் தற்போது தியாண்டுசெங் கிராமம், சீன மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. குறிப்பாக திருமண புகைப்படங்களுக்கு இது பிரபலமாக உள்ளது. இங்கு உள்ள உணவு விடுதிகளில் பிரெஞ்சு உணவுகளுக்கு பதிலாக சீன உணவு வகைகளே பரிமாறப்படுகின்றன. இந்த கிராமம், சீனாவின் “டூபிளிடெக்சர்” (duplitecture) போக்கின் ஒரு பகுதியாக உள்ளது. மேலும் உலகப் புகழ்பெற்ற இடங்களைப் பிரதியெடுக்கும் முயற்சியை சீனா அரசு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

-மு. குபேரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.