மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவா்கள் பிறப்பித்த அற்புதமான உத்தரவு.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் ஒன்று நீதிமன்றத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒரு வழக்கை தாக்கல் செய்தார்கள். அதில் ஆறாம் வகுப்பு மட்டுமே படித்த அறுபது வயதான பெட்டிக்கடை வைத்துள்ள ஒரு நபர் விற்பனைக்கு வைத்திருந்த பனங்கற்கண்டு காலாவதி ஆனது என்று கூறி வழக்கு தொடுத்தனர்.

வழக்கு தொடுத்த அதிகாரி அந்த குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் நீங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ளுங்கள் இல்லாவிட்டால் பல வருடம் கோர்ட்டுக்கு வாய்தாவுக்கு அழைய வேண்டி வரும் 5000 ரூபாய் பைன் போடுவார்கள் அதை கட்டி விட்டு போய் விடுங்கள் என்று சொல்லி  உள்ளார் அதை நம்பி அந்த நபர் நீதிபதி கேட்ட பொழுது பைன் கட்டுவதாக கூறியுள்ளார்.

அங்குசம் இதழ்..

அதன் பிறகு பைன் தொகை ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரம் அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது அதைக் கேட்டு தலை சுற்றி மயங்கி விழுந்த குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிபதியிடம் முறையிட்டார் ஐயா இந்த வழக்குக்கு 5000 ரூபாய் தான் பைன் கட்ட சொல்வார்கள் என்று என் மீது வழக்கு போட்ட அதிகாரி கூறினார் .

ஆனால் இங்கே ஒரு  லட்சத்து 50 ஆயிரம் கட்ட சொல்கிறீர்கள் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி நான் வழக்கு நடத்த அனுமதி தாருங்கள் என்று  கேட்டுள்ளார் .

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஆனந்த் வெங்கடேஷ்
ஆனந்த் வெங்கடேஷ்

அதற்கு நீதிபதி முதலில் கேட்டபோது அபராதம் கட்ட ஒப்புக்கொண்டதால் வழக்கு நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார். இந்த நிலையில் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரனை தொடர்பு கொண்ட குற்றம் சாட்டப்பட்ட நபர் எனக்கு நீதி கிடைக்க உதவுமாறு வேண்டி உள்ளார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு  எண் 10665/2023 தாக்கல் செய்யப்பட்டு நேற்று  19.11.2024  மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர் ஆனந்த் வெங்கடேஷ் மேல் முறையிட்டை விசாரித்தபோது மனுவில்  நியாயம் உள்ளது என்று  அறிந்த நீதி அரசர் இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த அனுமதி அளித்து  உத்தரவிட்டார்.  இது மிகச் சிறப்பான தீர்ப்பாகும்.  இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஹென்றி டிபேன்,  கருணாநிதி,  பெருமாள் , தமிழ் இராஜேந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.