சாதனை….

கடனாய் வாங்கிய மாடுகளை பூட்டி…

ஏர் ஓட்ட வில்லை…

வரப்பு வெட்டி… நீர் பாச்சவும் இல்லை…

சித்தாளாய் கூலிக்குப் போன ….

அம்மா அக்காவை கூட்டியாந்து…

நாற்றங்கால் நட்டு விட்டு போக….

அம்பது ரூபா கூட…..

தரன்னு பேரம் பேசவும் இல்லை…

நாள் வந்துவிட்டது என்ன செய்ய…..

பக்கத்து ஊர்ல இருந்து ஆள் கூட்டியாந்து….

நடவு நடவுமில்லை…

சாமக்கோழி கூவ…

வயலுக்கு போயி…

அந்தி சாய வீடு திரும்பவும் இல்லை….

காக்கா குருவிகள பயமுறுத்த ….

பானை தலையன் பொம்மையும் வைக்கவில்லை….

முப்போகும் விளைய உரமிடவும் இல்லை….

பூச்சியை கொல்ல மருந்தடிக்கவும் இல்லை….

ஆனாலும்….

வளர்ந்து நிற்கிறது நற்பயிர்கள்….

மழையில் நனைந்த எங்கள் உழைப்புகள்…..

வயிறு எரிகிறது கொட்டிய கனமழையில்….

சாதித்து காட்டியதோ அரசின் கொள்முதலில்…..

 

—     செ.கார்க்கி

Comments are closed, but trackbacks and pingbacks are open.