அங்குசம் சேனலில் இணைய

நாம் சாதித்துள்ளவைகளுக்காக பெருமை கொள்ளலாமா ???

வெற்றியில் துள்ளுவதுமில்லை, தோல்வியில் வீழ்வதுமில்லை

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நாம் சாதித்துள்ளவைகளுக்காக பெருமை கொள்ளலாமா ???

இங்கு பலரும் நம் இன்றைய நிலையை எண்ணிப் புளகாங்கிதம் அடைகிறோம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மிகவும் கீழ் நிலையில் இருந்து முன்னேறி இந்த நிலையை அடைந்திருப்பதாக எண்ணி பெருமை கொள்கிறோம்.

அதுவும் யார் தயவுமின்றி மேலே வந்ததாக எந்த கூச்சமும் இல்லாமல் நமக்கு நாமே நார்சிச போதையை  கொஞ்சூண்டு ஏற்றிக் கொண்டால் தான் சிலருக்கு கிக் கிடைக்கிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்தப் பெருமை எண்ணம் ஓரளவுக்கு இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் அதுவே நம்மை வீழ்த்தும் அளவுக்கு கர்வத்தையும் அகந்தையையும் பிறரை கீழ்மைப்படுத்துகிற சுற்றத்தை துச்சமென எண்ணும் எண்ணங்களை நம்முள் விதைத்து விட்டால் அதுவே நம்மை வீழ்த்தப் போதுமானதாகிவிடுகிறது.

இந்த உலக வாழ்க்கையில் இரண்டே வழிகள் தான்.

ஒன்று நன்றாக வாழ்ந்தவர்கள் கீழ் நிலைக்குச் செல்வது. மற்றொன்று கீழ் நிலையில் வாழ்ந்தவர்கள்மேலே உயர்வது.

இதில் இரண்டு நிலையை அடைந்தவர்களும் அதை எண்ணிப் பெருமைப்படவோ அல்லது கவலை கொள்ளவோ ஒன்றுமே இல்லை என்பது எனது எண்ணம்.

achievementsகாரணம் இந்த இரண்டும் வாழ்வில் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.

தன் முயற்சியால் சுற்றத்தின் உதவியால் ஒருவன் வாழ்க்கைப் படிக்கட்டுகளில் மேலேறி வருகிறான். பிறகு அவனே தனது கர்வத்தால் அகந்தையால் பொறாமையால் பேராசையால் தனது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டுக்கொள்கிறான்.

உலகில் யாருமே சாதிக்காததை தான் செய்து விட்டதாகப்  பொய் பிம்பத்தில் சிக்கிக்  கொள்கிறான். வெற்றி தரும் போதைக்கும் டோபமின் சுரப்பிற்கும் அடிமையாகிறான்.

தோல்வி தரும் ஞானத்தைப் புறம் தள்ளுகிறான். முகஸ்துதிக்கு மயங்குகிறான். துதி பாடுபவர்களை கூடவே வைத்துக்கொள்கிறான்.

அவர்கள் வெட்டும் படுகுழியில் வீழ்ந்து அழிகிறான். மற்றொருவன் தான் கண்ட தோல்விகளில் இருந்து ஞான மருந்தை அருந்துகிறான். வெற்றிகள் தற்காலிகமென்றும் தோல்விகளும் அது போலவே என்று உணர்கிறான்.

தன்னோடு சிந்தனையிலும் செயலிலும் ஒத்திசைக்கும் மக்களை சுற்றமாக்கிக்கொள்கிறான். முன்னேறுகிறான்.

நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மேடை தான் நம்மை தேர்ந்தெடுக்கிறது. அந்த மேடையை நாம் தேர்ந்தெடுக்கவில்லை

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ஒரு மாலை தான் நம்மை அடைய வேண்டுமேயன்றி அந்த மாலைக்குள் நாம் கழுத்தை நீட்டுவது அபத்தம்.

அதுபோலவே இந்த வாழ்க்கை சுழற்சியில் அனைத்தும் இடம் பொருள் ஏவல் நம் முயற்சி ஊழ் வைத்திருக்கும் ஆச்சரியங்கள்

நமது நடவடிக்கைகள், நமது சுற்றம் என்று அனைத்துமே சேர்ந்து தான் நம்மை ஒரு வெற்றிக்கோ தோல்விக்கோ ஆயத்தப்படுத்துகின்றன.

Dr .அ.ப.ஃபரூக் அப்துல்லா,
Dr .அ.ப.ஃபரூக் அப்துல்லா,

இதில் நான் மட்டுமே இத்தனைக்கும் காரணம் என்று எவன் கூறுகிறானோ அவன் நிரந்தர மனநோய்க்கு தள்ளப்படுகிறான்

வெற்றி வரும் போது காற்றில் பறக்கிறான்

தோல்வி வரும் போது பாதாளத்தில் பரிதவிக்கிறான்

மேற்சொன்ன இரண்டுக்கும் நாம் மட்டுமே காரணமில்லை என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்பவன்

வெற்றியில் துள்ளுவதுமில்லை

தோல்வியில் வீழ்வதுமில்லை

நிச்சயம் ஒரு வெற்றி ஒரு தோல்வியில் முடியுமாறு வாழ்க்கை பயணம் அமைக்கப்படவில்லை பொறுமையுடனும் நிதானத்துடனும் பயணிப்போம் .

பிறப்பால் நம் மீது விதிக்கப்பட்டதாக இருந்தாலும் சரி..

உழைப்பால் நமக்குக் கிடைத்ததாக இருந்தாலும் சரி..

பெருமை அவசியமற்றது…

 

 

Dr. அ.ப. ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.