கட்சியினரிடம் பணி புரிவதில் போட்டி உள்ளது. மதுரை அதிமுக கள ஆய்வு களேபரங்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

துரையில் அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட கழகத்திற்கான கள ஆய்வுக் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு சேம்பர் ஆஃப் காமர்ஸில் துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் செம்மலை, மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பகுதி கழக செயலாளரிடம் உறுப்பினர் படிவம் சேர்க்கை மற்றும் பதிவு குறித்து விசாரித்துக் கொண்டிருந்த போது அதிமுக உறுப்பினர்களான பைகரா பகுதியை சேர்ந்த செழியன் மற்றும் பீபி குளம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் மேடைக்கு வந்து பகுதி கழக நிர்வாகிகளை விசாரிப்பது போல, மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூவையும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்த உடனே சட்டென்று அங்கிருந்த நிர்வாகிகள் இருவரையும் மேடையில் இருந்து தள்ளி விட்டு கடுமையாக தாக்கியதால் மோதல் ஏற்பட்டு பதற்றமான சூழல் நிலவியது.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

டாக்டர் சரவணன்

டாக்டர் சரவணன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

நத்தம் விஸ்வநாதன், செம்மலை உள்ளிட்டோர் சமாதானம் செய்ததை தொடர்ந்து மேடையில் அமர்ந்திருந்த டாக்டர் சரவணனை பார்த்து கட்சியின் சிலர் கோஷம் எழுப்பினர். பின்னர் என்ன நடந்தது என்று எங்களுக்கே இன்னும் புரியவில்லை என மேடையில் நத்தம் விஸ்வநாதன் சமாதானம் செய்து பேசுகையில், கட்சியை செயல்பட விடாமல் சிலர் தடுப்பதாக நிர்வாகிகள் கூச்சலிட்டனர்.

சம்பவத்தை கேள்விப்பட்டு அரங்கத்தின் உள்ளே வந்த காவல்துறையினரிடம் இது கட்சி விவகாரம் காவல்துறை இதில் தலையிட வேண்டாம் என நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.

பின்னர் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர் நிருபர்களிடம் பேசுகையில், “எந்த மோதலும் இல்லை. அதிமுகவில் பிரச்சனை இருப்பது போல பூதாகரமாக்க முயல்கின்றனர். இது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை. அதிமுகவில் சலசலப்பு இல்லை. கட்சியினரிடம் பணி புரிவதில் போட்டி உள்ளது. அவ்வளவு தான். கட்சியினர் பேசுவதற்கு அனுமதி கேட்டனர் அதை தருவதாக சொன்னோம். பிரச்சனை முடிந்து விட்டது. கள ஆய்வு முடிந்தவுடன் வாய்ப்பு தருவதாக சொன்னோம், அதற்குள் சிலர் எழுப்பிய சத்தத்தை பெரிதாக்கி விட்டனர்” என்றனர்.

பைக்காரா செழியன்
பைக்காரா செழியன்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மேடையில் இருந்து கீழே தள்ளிவிட்ட பைக்காரா செழியனை நாம் நேரில் சந்தித்தோம். “தலைமையில் இருந்து வந்தவர்கள் பகுதி செயலாளர்களிடம் கேள்வி கேட்க நாங்கள் பதில் அளித்தோம். அதேபோல் மதுரை மாவட்ட செயலாளரிடம் கேள்வி கேட்க வேண்டும் அல்லவா? அதைத்தான் நான் கேட்டேன் ?அதற்கு என்னை பிடித்து கீழே தள்ளிவிட்டார்கள். அதிமுக தொண்டர்கள் கோசம் எழுப்பினர்.

பிபிகுளம் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் செல்லூர் ராஜு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு பகுதி செயலாளர் பொறுப்பு. அவர் திமுக புறநகர் மாவட்ட செயலாளர் மணிமாறனிடம் கைக்கூலியாக செயல்பட்டு அவருடைய அரசு வேலைகளை காண்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார். இவர் எப்படி நாளை அதிமுகவுக்கு ஓட்டு கேட்பார்.

அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடியாரை செல்லூர் ராஜு மதிப்பதில்லை. மதுரையில் உள்ள தொண்டர்களையும் மதிப்பதில்லை. மதுரையில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக 3-ம்  இடத்திற்குதள்ளப்பட்டதற்கு காரணம் செல்லூர் ராஜு தான்” என்று ஒரே போடாக போட்டார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதைப்போலவே, மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற  கள ஆய்வுக் கூட்டத்திலும் சலசலப்பை காண முடிந்தது.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர் முன்னிலையில் அதிமுக மூத்த நிர்வாகிகளோடு கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அதிமுக கள ஆய்வு களேபரங்கள் இந்த கூட்டத்தின் நிறைவில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோருக்கு அதிமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்த முற்பட்டபோது, அதிமுக நிர்வாகிகளிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஒருவருக்கொருவர் மாற்றி தாக்கத் தொடங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் செம்மலை ஆகியோர் பாதுகாப்பாக காரில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.