நாளைய முதல்வர் எடப்பாடியார் வாழ்க! முதல்வர் பார்த்து கோஷமிட்ட அதிமுகவினரால் பரபரப்பு !
அருப்புக்கோட்டை பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) காலை பசும்பொன் சென்றார். அங்கு தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, மதுரை விமான நிலையம் நோக்கி அருப்புக்கோட்டை வழியாக பயணித்தார். முதல்வரின் வாகனங்கள் அருப்புக்கோட்டை நகரை கடக்கும்போது, அங்கிருந்த அதிமுகவினர் திடீரென கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சி விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
 அருப்புக்கோட்டை நகர அதிமுக செயலாளர் சோலை சேதுபதி, கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் விமல் குருசாமி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் மீனாட்சி, விவசாய அணி செயலாளர் குமார், சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் சங்கர், பேரவை உறுப்பினர் செல்வராஜ், நகர துணைச் செயலாளர் சிவா, இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் முரளி, நகர் மன்ற உறுப்பினர் முருகன், ஆகியோர் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் வாகனத் தொகுப்பு அங்கு வந்தவுடன், திரண்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் “கழக பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி வாழ்க! நாளைய முதல்வர் எடப்பாடியார் வாழ்க!” என பலத்த கோஷம் எழுப்பினர்.
 அதுமட்டுமன்றி, முதல்வரின் வாகனத்திற்கு பின் வந்த திமுகவினர் பயணித்த கார்களை நோக்கியும் “எடப்பாடியார் வாழ்க, வருங்கால முதல்வர் எடப்பாடியார் வாழ்க” என கோஷமிட்டனர்.
அதுமட்டுமன்றி, முதல்வரின் வாகனத்திற்கு பின் வந்த திமுகவினர் பயணித்த கார்களை நோக்கியும் “எடப்பாடியார் வாழ்க, வருங்கால முதல்வர் எடப்பாடியார் வாழ்க” என கோஷமிட்டனர்.
இந்த கோஷத்தை கேட்ட திமுகவினர் தலையைக் குனிந்து சிரித்தபடியே வாகனங்களில் சென்றனர். இந்த சம்பவம் சில நிமிடங்கள் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அங்கிருந்த பொதுமக்கள் “முதல்வர் வாகனத்தை கண்டு அதிமுகவினர் எடப்பாடி பெயரை முழங்கியிருப்பது எதிர்பாராத சம்பவம்” என ஆச்சரியமடைந்தனர்.
இந்த சம்பவம் அருப்புக்கோட்டையில் அரசியல் ரீதியாக பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
— மாரீஸ்வரன்
 
Comments are closed, but trackbacks and pingbacks are open.