இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றிய செயலாளருக்கு கடும் எதிர்ப்பு ! அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிராக கூட்டப்பட்ட ரகசிய கூடத்தால் பரபரப்பு !!
தனக்கு வேண்டப்பட்ட ஒருவரை , சம்மந்தமே இல்லாத ஒன்றியத்திற்கு, செயலாளராக அறிவிக்க காரணமாக இருந்த முன்னாள் அமைச்சருக்கு எதிராக கூட்டப்பட்ட ரகசிய கூட்டம் அதிமுக தலைமையை அதிரவைத்துள்ளது
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி கிழக்கு ஒன்றிய கழக செயலாளராக இருந்தவர் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ். இவர் காலமானதையடுத்து காலியாக இருந்த கிழக்கு ஒன்றிய செயலாளர் பதவியை தங்களுக்கு வேண்டும் என கந்திலி கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ,லலிதா மாஹால் பெருமாள் முன்னாள் ஒன்றிய சேர்மன் திருப்பதி , அவைத்தலைவர் பூபதி , முருகன், கேசவன் , திவாகர் போன்ற பலரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணியை ரவுண்டு கட்டி வந்தனர்,
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் , திருப்பத்தூர் நகரை சேர்ந்த மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரான டி.டி.சி.சங்கர் என்பவரை கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டதாக அக்கட்சித் தலைமையிடம் இருந்து அறிவிப்பு வெளியானது,
இந்த அறிவிப்புக்கு கந்திலி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் (டிசம்பர் 25 ) நேற்று திருப்பத்தூரில் அவுசிங் ஃபோர்டு பகுதியிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றியத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி, ரகசிய கூட்டம் நடத்தினர்.
அந்தக் கூட்டத்தில், நமது ஒன்றியத்தை சேர்ந்த ஒருவரைத்தான் கட்சி தலைமை கிழக்கு ஒன்றிய செயலாளராக நியமனம் செய்திருக்க வேண்டும். அதைவிடுத்து, திருப்பத்தூர் நகரைச் சேர்ந்த ஒருவரை ஒன்றிய செயலாளராக நியமனம் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நமது ஒன்றியத்தைச் சார்ந்த நிர்வாகிகள் யாரும் புதிதாக நியமிக்கப்பட்ட டிடிசி சங்கரோடு தொடர்பில் இருக்க கூடாது என அதிரடியாக முடிவெடுத்துள்ளனர் ,
இதனால் , தேர்தல் ஆணையம் வழக்கு ஒருபுறம், சொத்து குவிப்பு வழக்கிற்கு மறுபுறம் , என கோர்ட் படி ஏறி வரும் வீரமணிக்கு இந்த சம்பவத்தால் மேலும் பெருத்த தலைவலியை ஏற்படுத்தியுள்ளது ,
அந்த ரகசிய கூட்டத்தில் பங்கெடுத்த ஒருவரிடம் பேசினோம் …
பெயரை தவிர்க்குமாறு கூறிவிட்டு , வாணியம்பாடி தொகுதியில் உள்ள ஆண்டியப்பனூரை பூர்விகமாக கொண்டவர் சக்ரவர்த்தி இவரது மகன்தான் இந்த டிடிசி சங்கர் வட்டி தொழில் செய்ய வந்து திருப்பத்தூர் நகரத்திலே செட்டில் ஆகிவிட்டனர் . வசதி வாய்பில் இருந்த டிடிசி சங்கர் ரஜினி மன்ற நகர செயலாளராகி விதவிதமான பிளக்ஸ் பேனர் அடித்து ரஜினியை திரும்பி பார்க்க வைத்தார் , கூடவே ரஜினி அரசியலுக்கு வருவார் வருவார் என காத்துக்கிடந்த சங்கருக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது
கழகங்களின் கட்சிகளில் இணைந்து தனது அரசியல் பதவி உச்சத்தை தொட முடிவெடுத்தவர் இவரது பங்காளி டிஎன்டி சுபாஷ் திமுகவில் இணைந்தால் , மறைந்த ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் டிடிசி சங்கர் .
அப்போது அமைச்சராக இருந்த வீரமணிக்கு வலதுகரமாகவும் மாறி . திருப்பத்தூர் நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளராக பதவி பெற்று , தற்போது மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளராக இருந்து வருகிறார், இன்னும் ஒருபடி மேலே சென்று வீரமணியின் பினாமியாகவும் இருப்பதாக கூறப்படுகிறது , அதனால்தான் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு வந்தபோது மறந்த ஒன்றிய செயலாளர் கேஜி ரமேஷ் மற்றும் இந்த சங்கர் வீடுகளில் ரெய்டு நடத்தினார்கள்
எனவே , பொது தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளராக யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் ஆனால், கட்சி பதவிக்கு கட்சியில் காலம்காலமாக உழைத்த எங்கள் பகுதியில் (கந்திலி) ஒருவரைத்தான் ஒன்றிய செயலாளராக வரவேண்டும் , இதை கட்சி தலைமைக்கு வலியுறுத்துவோம் என்றார் மிக அழுத்தமாக.
திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை தொகுதிகளில் குறிப்பிட்ட (வன்னியர்) சமுதாயத்தினர் நிறைந்துள்ளனர் இங்க வந்து மாற்று சமூகத்தை (அகமுடையார் ) சேரந்த டிடிசி சங்கரை கொண்டு வந்தது ஏற்கும்படியில்லை , ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள் , எங்கள் அமைச்சர் வீரமணியை தவிரத்து பார்த்தால் , அதிமுகவில் தலைமைக்கு நெருக்கமான “வன்னியர்” பிரதிநிதி இந்த மாவட்டத்திலே யாருமில்லை . எனவே எதிர்காலத்தை கருதி வீரமணியிடம் முறையிடுவோம் அதற்கும் அவர் செவி சாய்க்கவில்லையெனில் பத்தாயிரம் தொண்டர்களோடு தலைமைக்கு படையெடுப்போம் என்றார் அதிரடியாக அருகில் இருந்த ஒன்றிய கவுன்சிலர் எதிரப்புக்குள்ளான டி.டி.சி . சங்கரிடம் காரணத்தை அறிய அவரது எண்ணிற்கு தொடர்பு கொண்டோம் .
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எனக்கு எதிராக கூட்டப்பட்ட ரகசிய கூடத்தை நானும் அறிந்தேன் . தலைமை யாரை அறிவிக்கிறதோ எங்கள் தொண்டர்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள், மேலும் இதுகுறித்து எங்கள் தலைமையிடமும் எங்கள் முன்னாள் அமைச்சரிடமும் பேச உள்ளேன் . அதன்பிறகு இரண்டொரு நாட்களில் கந்திலி கிழக்கு ஒன்றிய அதிமுக தொண்டர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற உள்ளேன் என்றார்
புதிதாக அறிவிக்கப்பட்ட ஒன்றிய செயலாளருக்கும் . முன்னாள் அமைச்சருக்கும் அக்கட்சியினரே ரகசிய கூட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வருவது அதிமுக தலைமையிடத்திலும், கந்திலி ஒன்றிய அதிமுக தொண்டர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
– மணிகண்டன்.