திருச்சி மக்களே உஷார்- 87 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல்!
நேற்று 22.09.2021 புதன்கிழமை திருச்சிராப்பள்ளி உணவு பாதுகாப்பு துறையின் கீழ் திருச்சி பீமா நகர், அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியிலும், சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள 15 கடைகளும் ஆய்வு செய்யப்பட்டது.
பீமா நகர் அரியமங்கலத்தில் ஆய்வு செய்யப்பட்ட பேக்கரியில் சுமார் 19 கிலோ தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இல்லாத உணவு பொருட்களும், இரண்டு சட்டபூர்வ உணவு மாதிரியும், சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்ட 15 கடைகளில் இருந்து சுமார் 68 கிலோ உணவு பொருட்களும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் என 4 .1/2 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு இதுதொடர்பாக 6 உணவு மாதிரி சேகரிக்கப்பட்டது,
இவ்வாறு நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் மொத்தமாக 87 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு போடுவதற்காக 8 உணவு மாதிரிகள் எடுக்கபட்டு தமிழக அரசின் உணவு பகுபாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் சரியான லேபிள் முறையை பின்பற்றாமல் காலாவதி மற்றும் தயாரிப்பு தேதி இல்லாமல் உணவு பொருட்களை விற்பனை செய்தாலோ, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தாலோ உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் தொலைபேசி எண் இந்த எண்ணில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
தொலைபேசி எண்
99 44 95 95 95
95 85 95 95 95
மாநில புகார் எண்
94 44 04 23 22