திடீரென பாதியில் வெளியேறிய த.வெ.க தொண்டர்கள்… விஜய் கட்சி கூட்டத்தில் நடந்தது இதுதான் !
திடீரென பாதியில் வெளியேறிய த.வெ.க தொண்டர்கள்… விஜய் கட்சி கூட்டத்தில் நடந்தது இதுதான் !
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருப்பதாக நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து முதல் மாநாடு மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. விரைவில் தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக டிசம்பர் – 15, அன்று மாலை விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில், தமிழக வெற்றி கழக மத்திய மாவட்ட தலைவர் சின்னப்பர், தலைமையில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆனால், சிறப்பு பேச்சாளர்கள் யாரும் இல்லாததால், தமிழக வெற்றி கழகத்தின் கட்சியின் கொள்கை, கோட்பாடு, ஆலோசனை கூட்டத்திற்கான நோக்கம், என்பதையெல்லாம் பற்றி பேசாமல்,
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தங்கள் மனதில் பட்டதை எல்லாம் கூட்டத்தில் நிர்வாகிகள் பேசியதால், மண்டபத்தில் இருந்த ஆண் மற்றும் பெண் தொண்டர்கள் எதற்காக இந்த கூட்டம் நடைபெறுகிறது என்பது தெரியாமல் குழப்பம் அடைந்து, வெறுப்படைந்து சிலர் மண்டபத்தை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள்.
மீண்டும் கூட்டத்திற்கு உள்ளே செல்லுங்கள் என தொண்டர்களை கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால், அதை பொருட்படுத்தாமல் தொண்டர்கள் வெளியே சென்றதால் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
— மாரீஸ்வரன்.