எழுச்சி கண்ட எடப்பாடியார் – அதிமுகவில் அதிரடி மூவ்… !
எழுச்சி கண்ட எடப்பாடியார் – அதிமுகவில் அதிரடி மூவ்… !
மதுரை எழுச்சி மாநாட்டை தொடர்ந்து டாப்கியரில் பயணிக்கும் எடப்பாடி பழனிச்சாமி, பல்வேறு அதிரடிகளை அடுத்தடுத்து அரங்கேற்றி வருகிறார். பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட நிகழ்வை அதிமுக தொண்டர்கள் கொண்டாடித்தீர்க்கிறார்கள்.
”கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?”னு கேட்பது போல, மாநிலம் முழுவதும் காலியாக கிடந்த கட்சி பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து தொண்டர்களை குஷிபடுத்தியிருக்கிறார், எடப்பாடி பழனிச்சாமி.
மகளிருக்கான இடஒதுக்கீடு தொடர்பான விவாதம் தொடரும் நிலையில், திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளராக ஜெயசுதாவை நியமித்து ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி என்ற முத்திரையை மாற்றும் விதமாக, மாத்தி யோசித்த எடப்பாடி, டாப் சீனியர்கள் பலரும் மல்லுக்கு நிற்க ஜெ.சீனிவாசன் என்பவருக்கு திருச்சி மாவட்ட செயலாளர் பொறுப்பை வழங்கியிருக்கிறார்.
இதற்கு முன்னர் மாவட்ட அளவிலான எந்த பொறுப்பும் வகித்திராத, முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசனின் எதிர்பார்ப்பில்லாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்கிறார்கள், அவரது ஆதரவாளர்கள். மிக முக்கியமாக, ஆளும் கட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரான சி.வெ.கணேசனின் மருமகனான பொன்னரை அதிமுகவிற்கு அழைத்து வந்ததற்கு கிடைத்த பரிசு இது என்கிறார்கள்.
அதேபோல, மதுரை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு பக்கபலமாக நின்ற டாக்டர் சரவணனுக்கும் மருத்துவ அணி இணைச் செயலாளர் பதவியை வழங்கியிருக்கிறார். உண்மையாக உழைத்தால் தொண்டனுக்கும்கூட உரிய நேரத்தில் உரிய அங்கீகாரம் கட்டாயம் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக இதை சொல்கிறார்கள்.
அதுமட்டுமா, குழப்பமான காலகட்டத்தில் ஓ.பி.எஸ். மற்றும் தினகரன் பக்கம் சென்று பின் திரும்பி வந்தவர்களுக்கும்கூட முக்கியமான பொறுப்புகளை கொடுத்து தனது பெருந்தன்மையை நிரூபித்திருக்கிறார் என்கிறார்கள்.