பிஜேபிக்கு செல்ல தயாரான அதிமுக முன்னாள் அமைச்சர் ? கவுண்டவுன் ஸ்டார்ட் !
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகான அதிமுகவில், சர்ச்சைக்குரிய அமைச்சராக வலம் வந்தவர் ராஜேந்திரபாலாஜி. இவர் பாஜகவை ஆதரிப்பதற்காக “மோடியை எங்கள் டாடி” என்று பொது மேடைகளிலேயே முழங்கினார். மேலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சார்ந்த ஆதரவான கருத்துக்களை பல்வேறு சமயங்களில் வெளிப்படுத்தினார்.
இந்த நிலையில் சென்ற முறை போட்டியிட்ட சிவகாசி தொகுதியில் மீண்டும் தற்போதைய தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதுதால், எடப்பாடியிடம் மன்றாடி தற்போது முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டார். அங்கும் தோல்வியும் அடைந்தார்.
இந்த நிலையில் திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், திமுகவினானுடைய ஹிட் லிஸ்டில் முக்கியமான இடத்தில் ராஜேந்திர பாலாஜி உள்ளதாலும் மேலும் அதிமுக ஆட்சியில் ஊழல் செய்ததாக, ஊழல் செய்த அமைச்சர்கள் பட்டியலை ஆளுநரிடம் திமுக வழங்கியது, அந்தப் பட்டியலிலும் ராஜேந்திரபாலாஜி முக்கிய இடத்தில் இருப்பதால், இனி ராஜேந்திரபாலாஜி கடுமையான சிக்கலை சந்திக்க கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அதிமுகவிலிருந்து பிஜேபிக்கு சென்ற நயினார் நாகேந்திரனை பிஜேபி சட்டமன்ற குழு தலைவராக ஆக்கியது. அதற்கு காரணமே அதிமுகவினரை பிஜேபிக்கு இழுப்பதற்காக தான் என்று கமலாலய வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதை தொடர்ந்து ஊரடங்கு காரணமாக முக்கிய புள்ளிகள் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், தனக்கு கொடுத்த அசைமெண்டை தொடங்கி விட்டாராம் நயினார் நாகேந்திரன். தன்னுடைய அசைமெண்டின் முதல் முயற்சியாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிஜேபிக்கு இழுக்க பேசிவிட்டாராம்.
இந்த நிலையில் ஊரடங்கு முடிந்தவுடன் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் தன்னை இனைத்துக் கொள்வார் என்று விருதுநகர் வட்டாரங்கள் கூறுகின்றன. இதன்பிறகு தொடர்ந்து பலரும் பிஜேபி பக்கம் சாய உள்ளார்கள்.