அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ! தொடங்கியது ஆன்லைன் முன்பதிவு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் 14-ஆம் தேதி அவனியாபுரம், 15-ஆம் தேதி பாலமேடு, 16-ஆம் தேதி உலகபுகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆகிய 3 போட்டிகளை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு ஆன்லைன் முன் பதிவு தொடங்கியது. ஜனவரி-07 மாலை 5 மணி முதலாக, madurai.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. இதில் ஏராளமான இளைஞர்கள், காளை உரிமையாளர்கள் ஆர்வமுடன் பதிவு செய்துவருகின்றனர்.

ஜல்லிக்கட்டு ஆன்லைன் முன்பதிவு
ஜல்லிக்கட்டு ஆன்லைன் முன்பதிவு

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

காளைகளுக்கான முன்பதிவுக்கு என்ன விவரங்கள் தேவை?

ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் போது காளைகளுக்கான பதிவில் காளையின் இனம், பூர்வீகம், வயது,  பல் வரிசைகள், நிறம், கொம்பின் நீளம், காளையின் உயரம், காளையின் அடையாளங்கள், கொம்புகளுக்கு இடையே உள்ள இடைவெளி, கால்நடை மருந்தகத்தின் பெயர், தடுப்பூசி விவரங்கள், காளையின் மருத்துவச் சான்றிதழ், காளையின் படம், உரிமையாளர் & உதவியாளருடன்  புகைப்படம் என்ற ஆவணங்களுடன் ஜல்லிக்கட்டு காளையை துன்புறுத்தாமல் விதிகளுக்கு உட்பட்டு போட்டியில் கலந்துகொள்வோம் என்ற உறுதிமொழியிலும் ஒப்புதல் அளித்த பின்னரே முன்பதிவு செய்யப்பட்டுவருகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஜல்லிக்கட்டுமாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவுக்கு என்ன விவரங்கள் தேவை?

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

இதேபோன்று மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவில் மாடுபிடி வீரரின் கைபேசி எண் , ஆதார் எண்,  பெயர், வயது,  முகவரி, மின்னஞ்சல், எடை , இரத்த வகை , உயரம், காளையை அடக்குபவர் மருத்துவச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்த பின்னர் முன்பதிவு செய்யப்படுகிறது.

ஜல்லிக்கட்டுபதிவின் போதே எந்த போட்டியில் கலந்துகொள்ளபோவது குறித்தும் தகவல் அளிக்க வேண்டும், ஒரு போட்டியில் கலந்துகொள்ளும் மாடுபிடி வீரரோ, காளைகளோ மாற்று போட்டியில் கலந்துகொள்ள இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. பதிவு செய்யப்பட்ட காளை மற்றும் மாடுபிடி வீரர்களின் ஆவணங்களை பொறுத்து அவர்களுக்கான அனுமதி சீட்டு ஆன்லைனிலயே டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதனையடுத்து போட்டிக்கு வரும் முன்பாக முன்பதிவு டோக்கனை எடுத்துவந்தால் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படுவர். ஆன்லைன் மூலமாக பதிவு தொடங்கிய நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாடுபிடி வீரர்கள்,  காளை உரிமையாளர்கள் ஆர்வமுடன் தங்களது பெயர்களை பதிவு செய்து வருகின்றனர். முறைகேடுகளை தடுக்க QR code இணைப்புடன் டோக்கன் வழங்கப்படும், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, ஆன்லைன் மூலமே டோக்கன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

—    ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.