“ஒரு பதிவிலிருந்து தொடங்கிய ஆலப்புழா கனவு” – அனுபவங்கள் ஆயிரம்(10)
நான் பேஸ்புக் ஸ்க்ரோல் பண்ணிக்கிட்டு இருந்தப்போ ஒரு நபரின் பதிவு எனக்கு கண்ணில் பட்டது . அப்படி ஒரு இனிமையான travel experience! அவர் குடும்பத்தோட ஆலப்புழா போட் ஹவுஸ் ட்ரிப் சென்ற அனுபவத்தை எழுதியிருந்தார். அந்த வர்ணனையே அப்படி அழகா இருந்தது . வாசிக்கும்போதே எனக்கும் அந்த நீர் நெடுக நடக்கும் போட், கரிமீன் வாசனை, மென் தூறல், இளையராஜா இசை எல்லாமே மனசுல கலந்துபோச்சு.
அவரின் பதிவு ;
சம்மர்லதான கூட்டம் அதிகமா இருக்கும் அதனால இப்போ போவோம்னு தோணுச்சு. ஹில் ஸ்டேஷன் வேண்டாம் வேற எங்கனா போகலாம்னு ஹோம் மினிஸ்டர் சொன்னாங்க. சரி ஆலப்புழா போட் ஹவுஸ் போகலாமானு கேட்டதுக்கு ஒடனே சரினாங்க. குழந்தைகளுக்கும் ஒரு வித்தியாசமான எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்குமேனு ஆலப்புழாவே பைனல் பண்ணியாச்சு.
போட் ஹவுஸ் புக் பண்ணனும். நாமளே நேரடியா quote வாங்கலாம்தான். ஆனா, நமக்கு காட்டுறது ஒரு போட்_ஓட போட்டோ காட்டுவாங்க அங்க போய் பாத்தா அதுக்கு சம்மந்தமே இல்லாம வேற ஒன்னுக்கு கூட்டிட்டு போவாங்க. புக் பண்ண டேட்க்கு முன்னாடியே முக்காவாசி அட்வான்சா வாங்கிடுவாங்க. அதனால நாம எதுவும் பேசமுடியாது. வேற என்ன பண்றது? கைல வெண்ணெய வெச்சிட்டு நெய்க்கு ஏன் அலையனும்னு நம்ம பாஸ்கர் ப்ரோவுக்கு போன் போட்டேன். அதுக்கென்ன ப்ரோ, நீங்க டேட் மட்டும் கன்பார்ம் பண்ணி சொல்லுங்கனு சொன்னாரு. நானும் அப் & டவுன் ட்ரெய்ன் அவெய்லபிலிட்டி பாத்துட்டு டேட் கன்பார்ம் பண்ணி சொன்னோடன போட் புக் பண்ணி குடுத்துட்டாரு.
வழக்கமா மதியம் மீன் + சாப்பாடு, நைட் சப்பாத்தி, சிக்கன் provide பண்ணுவாங்க ப்ரோ, உங்களுக்கு அதே மெனுதானே?னு கேட்டாரு. எது சிக்கனா? எனக்கேவா?னு கேட்டுட்டு மதியமும் நைட்டும் ரெண்டுவேளைக்கும் மீன் தான் வேணும். அதுவும் கரிமீன் மட்டும்தான் வேணும், கூடவே கேரளா அரிசி சாப்பாடுதான் கண்டிப்பா வேணும்னு சொல்லிட்டேன். ஏன்னா “Be a Roman in Rome” அப்டிங்கறதுல எந்தவிதமான காம்ப்ரமைசும் பண்ணிக்கமாட்டேன்.
புக் பண்ண தேதில காலைல 5 மணிக்குலாம் ஆலப்புழா போயாச்சு. ஆனா போட் டைமிங் மதியம் 12 க்குதான் check in. அதுவரை என்ன பண்ணலாம்னு யோசிச்சு டக்குனு ஒரு ஆட்டோவ புடிச்சு பீச் ஓரமா ஒரு ஹோம் ஸ்டே எடுத்து பேக்கேஜ்லாம் வெச்சிட்டு ரெண்டு மணிநேரம் பீச் வாக் போனோம். முடிச்சிட்டு வந்து குளிச்சிட்டு அங்க பக்கத்துல ஒரு சின்ன கடைல breakfastக்கு ஆப்பம் + கடலைக்கறி, ஆப்பம் + முட்டைக்கறி, கட்டஞ்சாயா_னு ஒரு கட்டுகட்டிட்டு (பில் நாலு பேருக்குமே சேர்த்து 180/_ தான் ஆச்சு) ஒரு மணிநேரம் ரெஸ்ட் எடுத்துட்டு மறுபடி ஆட்டோ புடிச்சு boat jetty போனோம்.
பன்னண்டு மணிக்கு போட் உள்ள போயிட்டோம். போனோடன ஒரு welcome drink குடுத்தாங்க. ஆக்சுவலா நா புக் பண்ண சொன்னது ஒரு பெட்ரூம் இருக்க மாதிரி. ஆனா, பாஸ்கர் ப்ரோ சஸ்பென்சா அதே காஸ்ட்க்கு எனக்கு டபுள் பெட்ரூம் இருக்க போட் புக் பண்ணி குடுத்தாரு.
நாங்க செட்டிலானோடன போட் கிளம்புச்சு. அன்னிக்குனு பாத்து லேசான தூரல் வேற. Back waterல மென் தூறலோட போட்ல போற சுகத்தைலாம் வார்த்தைல சொல்லனும்னா நிசப்தமான இரவுல இளையராஜா இசை மாதிரினு சொல்லலாம். அப்படி ஒரு ரம்மியம். கரெக்ட்டா ஒன்னரை மணிக்கு போட்_அ நடு back waterல ஆப் பண்ணிட்டு லஞ்ச் குடுத்தாங்க.
சொன்ன மாதிரியே கரிமீன் ப்ரை, அயிலை குழம்பு + கேரளா அரிசி சாப்பாடு இதுபோக வெஜ்_ல சாம்பார், பொரியல், தயிர், சாலட் எல்லாம் குடுத்தாங்க. நல்லா திருப்தியா சாப்ட்டு ஓகே சொன்னொடன மறுபடி போட் கிளப்பிட்டாங்க. தூறலும் நின்னுடுச்சு. ஒடனே போட்_ஓட அப்பர் டெக்குக்கு போயி ம்யூசிக் சிஸ்டத்துல பாட்ட போட்டு குழந்தைக டான்ஸ் ஆடுனாங்க. ரெண்டுகளும் செம ஹாப்பி.
அப்ரம் நாலு மணிக்கு ஸ்னாக்சோட செமயான டீ . அப்ரம் ஈவ்னிங் அஞ்சு மணி வரை போட் ஓட்டுனாங்க. அஞ்சு மணிக்கு போட் ஆப் பண்ணிட்டாங்க.
எட்டு மணிக்குலாம் டின்னர் ரெடி பண்ணி குடுத்துட்டாங்க. மறுபடி கரிமீன், நா தூண்டில் போட்டு fishing பண்ண மீன் , இறால் ப்ரைனு நைட்டும் செம சாப்பாடு. சாப்ட்டுட்டு ஏசியப்போட்டு செம தூக்கம். காலைல ஏழு மணிக்குலாம் குளிச்சி ரெடி ஆகிட்டோம். ஒடனே ஒரு டீ குடுத்தாங்க. எனக்கு கொஞ்சம் வேற ப்ளான்கள் இருந்ததால எட்டு மணிக்கே check out சொல்லிருந்தேன். அதுக்குள்ள breakfast ம் குடுத்தாங்க. முடிச்சிட்டு மனசு நிறைய இனிய நினைவுகளோட கிளம்பியாச்சி.
குழந்தைகளும் ஹேப்பி, ஹோம் மினிஸ்டரும் ஹேப்பி. போட்ட பட்ஜெட்குள்ள முடிஞ்சுதுனு
நானும் ஹேப்பி.
அந்தப் பதிவு படித்த உடனே எனக்குள் அங்கு செல்ல ஆசை எழுந்தது. குறிப்பா அவர் சொல்லியிருந்தார், “பாஸ்கர் ப்ரோ” மூலம்தான் அவர் போட் புக் பண்ணியிருக்கார். அவரின் ஃபேஸ்புக் ஐடி இருக்கிறது. அவர் அந்த பதிவிற்கு நன்றி கூறியிருக்கிறார்.
நான் ட்ரிப் பிளான் பண்ணும்போது பாஸ்கர் ப்ரோ வை தான் தொடர்பு கொள்ள போகிறேன்.
என் அனுபவத்தை இங்கே பகிர்வேன்
— மதுமிதா








Comments are closed, but trackbacks and pingbacks are open.