உரக்கச் சொல்வோம் அம்பேத்கர்.!
சிலருக்கு உரைக்கச் சொல்வோம் அம்பேத்கர்.!
பணியாக்கள் வாரிசுகளுக்கு….
உரைக்க சொல்வோம் அம்பேத்கர்.!
திரும்ப சொல்வோம் அம்பேத்கர்.!
ஜனநாயகத்தின் உன்னதமான…
கொள்கையில் படறிய நோய்க்கிருமிகள்…
பார்ப்பனிய நோய்க் கிருமிகள்….
வேரருக்கும் “எதிர்ப்பு மருந்து” அம்பேத்கர்.!
உரக்கச் செல்வோம் அம்பேத்கர்.!
ஊர் என்றும்… சேரி என்றும்…. மனுதர்மம் பிரித்த போதும்.!
சாதிக்கு ஒரு சுடுகாடு என்று…
சுயமரியாதையை சுட்ட போதும்.!
சாதி… தேசத்திற்கு எதிரானது …
“ஓங்கிய குரல்” அம்பேத்கர்…!
“சூத்திரன்” வேதம் படிக்கக் கூடாது…
சொந்த சாதிக்கு மட்டும் “கல்வி”….
ரத்த சொந்தங்களுக்கு மட்டும் “வேலை”….
நம்ம ஆளு “ஆட்சி அதிகாரத்தில்”…
இதற்கு அடி கோடிட்டது “மனுதருமத்தில்”…
உடைத்து நொறுக்கினார் அம்பேத்கரியத்தில்…
திரும்ப சொல்வோம் அம்பேத்கர்.!
உரக்கச் சொல்வோம் அம்பேத்கர்.!
சக மனிதன் சகோதரன்..
பிறப்பால் எவனும் உயர்ந்தவன் இல்லை…
எவனுக்கும் நான் அடிமையும் இல்லை….
இப்படி சொன்னால் எரியத்தானே செய்யும்..
எரியட்டும் சொல்வோம் அம்பேத்கர்..!
கலவரத்தின் போது “நாம் இந்து “என்பான்…
ஆலயத்தில் நுழையாதே “சூத்திரன்” என்பான்….
எடுத்து சொன்னவர் அம்பேத்கர்.!
திரும்ப சொல்லுவோம் அம்பேத்கர்…!
மசூதிக்கு அடியில் ராமன் சிலை…
இஸ்லாமியரை கொல்ல சதி வேலை..
இது…கோட்சே,ஷாக்கள் கைவந்த கலை…
இடையூறாய் அம்பேத்கர் அலை….
எரிய தானே செய்யும் அம்பேத்கர் என்றால்….
எரியட்டும் சொல்வோம் அம்பேத்கர்….
இந்து ராஜ்ஜியம் “பேராபத்து”…
வெளியேறி சென்றார் அறிவித்து…..
அம்பேத்கர் வெளியேறி சென்றார் அறிவித்து….
உரக்கச் சொல்வோம் அம்பேத்கர்.!
சிலருக்கு உரைக்கச் சொல்வோம் அம்பேத்கர்.!
செ.கார்க்கி.
திருச்சி.