அமெரிக்க, வெனிசுலாவின் மீது தாக்குதல் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் !
அமெரிக்கா, வெனிசுலாவின் மீது குண்டு வீசி ஆக்கிரமிப்பு செயலில் ஈடுபட்டதையும், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியையும் கைது செய்த அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் ஜனநாயக படுகொலையை கண்டித்தும் அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.
கரீபியன் கடலில் இருந்து தனது அனைத்து படைகளையும் திரும்ப பெற வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சில் அமெரிக்க ஆக்கிரமிப்பை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வெனிசுலா மீதான தனது ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்தும்படி அமெரிக்கா மீது சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டக்குழு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் திங்களன்று ஒத்தக்கடை பகுதியில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலக முன் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி உருவ பொம்மை மற்றும் அமெரிக்க கொடி எரிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு சி.பி.எம் மாநகர் மாவட்ட செயலாளர் கோவி.வெற்றிச் செல்வம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, ரேணுகா, லெனின், கார்த்திக், மாவட்டக்குழு ஜோன்ஸ், செல்வி, சுப்பிரமணி, தங்கராஜ் மற்றும் பகுதி செயலாளர்கள் ரபீக், சுரேஷ், தர்மா, விஜயேந்திரன், ஏழுமலை, கருணாநிதி, ராமர் ,வாலிபர் சங்க மாவட்ட தலைவர் மீரா, மாவட்ட செயலாளர் சேதுபதி, மாணவர் சங்க மாவட்ட தலைவர் மோகன், நிர்வாகி ஆர்த்தி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி, மாவட்ட பொருளாளர் மாலதி உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.