மறைந்தார் டி என் ஏ-வை கண்டுபிடித்த அமொிக்கா விஞ்ஞானி !
ஜேம்ஸ் டியூவீ வாட்சன் – மரபணுவின் (DNA) மர்மம் முதல் நாக தத்துவம் வரை.மனிதனின் உடல், மனம், உயிர் இவை அனைத்தையும் இயக்கும் மறைமுறை ரகசியம் ஒன்று உள்ளது. அதுதான் மரபணு (DNA). உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரின் உருவமும் பண்பும் அதனாலேயே தீர்மானிக்கப்படுகிறது. இது தான் “உயிரின் குறியீடு” Code of Life!இந்த மரபணுவின் வடிவத்தை கண்டறிந்ததன் மூலம் மனித அறிவியல் வரலாற்றையே மாற்றியவர் ஜேம்ஸ் டியூவீ வாட்சன் (James Dewey Watson).
2025 நவம்பர் 6-ஆம் தேதி, அமெரிக்கா, நியூயார்க் மாநிலத்தின் East Northport பகுதியில் உள்ள ஹாஸ்பிஸ் சிகிச்சை மையத்தில் காலமானார். அவரை பற்றிய சிறு குறிப்பு பார்ப்போம்.ஜேம்ஸ் டியூவீ வாட்சன் ஒரு அமெரிக்க உயிரியல் விஞ்ஞானி.அவர் 1928 ஏப்ரல் 6-ஆம் தேதி அமெரிக்காவின் சிக்காகோ (Chicago, Illinois) நகரத்தில் பிறந்தார். அவரது தந்தை ஜேம்ஸ் டால்ஹீ வாட்சன், தாய் ஜீன் மிச்செல் வாட்சன். சிறு வயதில் புத்தகங்கள், குறிப்பாக பறவைகள் (Ornithology) குறித்து தெரிந்து கொள்வதில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.

இந்த ஆர்வம் படிப்படியாக உயிரியல் மற்றும் மரபணு ஆய்வுகளின் மீது ஈர்ப்பை உருவாக்கியது.மட்டும் 25 வயதிலேயே அவர் மனிதர்களின் மரபணு அமைப்பு DNA-வின் வடிவத்தை வெளிப்படுத்தும் மிகப் பெரிய விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இங்கிலாந்தின் கேம்பர் பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தபோது பிரான்சிஸ் க்ரிக் (Francis Crick) உடன் இணைந்துDNA இரண்டு நுனிகளாகச் சுருண்டிருக்கும் Double Helix வடிவத்தை 1953-ல் உலகிற்கு அறிவித்தார்.இந்த கண்டுபிடிப்பு உலக உயிரியல் ஆராய்ச்சியில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.
இதன் மூலம் மனித மரபுரிமை ஆய்வு,மருத்துவ மரபணு நோய்கள் கண்டறிதல்,மருந்து வடிவமைப்பு,புலனாய்வியல் (Forensic Science),பரிணாம வளர்ச்சி ஆய்வு என்ற பல துறைகளில் புதிய வாயில்கள் திறக்கப்பட்டன.1962-ஆம் ஆண்டு, ஜேம்ஸ் வாட்சன், பிரான்சிஸ் க்ரிக் மற்றும் மொரிஸ் வில்கின்ஸ் ஆகியோர் இணைந்துஇந்த DNA வடிவமைப்பு கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு (Physiology or Medicine) பெற்றனர். அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். மேலும், அமெரிக்காவின் Cold Spring Harbor Laboratoryயை பல ஆண்டுகள் தலைமைத்துவம் செய்து மரபணு ஆராய்ச்சியை முன்னேற்றினார்.
மனித மரபணு தலைமுறை ரகசியம் மனித உடலில் தலைமுறை தலைமுறையாகக் கடந்து செல்லும் மறைவு குறியீடு ஒன்று உள்ளது அதுதான் DNA. அதே மரபு, குடும்ப வரலாறு, தனித்துவ குணங்கள், உடல் அமைப்பு அனைத்தையும் அது ஏந்தி நிற்கிறது.1953-ல் DNAவின் Double Helix வடிவம் அறிவிக்கப்பட்டபோது,உயிரியல் வரலாறு ஒரு புதிய திருப்புமுனையை கண்டது. DNA இரண்டு சங்கிலிகளாகச் சுருண்டிருக்கும். இந்த சுருள் வடிவமே இந்து மரபில் நாக வடிவச் சின்னமாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
உடலில் “குண்டலினி” சக்தி பாம்பு போல மூலத்தில் சுருண்டுள்ளது என்று யோக மரபு கூறுகிறது.அது மேலே எழும்பும்போது உருவாகும் அலை… அதே அலை ரத்த ஓட்டத்தில், மூச்சில், ஒலி அலைகளில், மின்சாரத்தில், பிரபஞ்ச இயக்கத்திலும் இயங்குகிறது. பாம்பு அலை இயக்கத்தின் சின்னம். இயக்கம் எங்கு இருக்கிறதோ அங்கே உயிர் இருக்கிறது.அதனால்தான் விஷ்ணு நாகத்தின் மேல் படுக்கின்றார், சிவனின் கழுத்தில் நாகம் இருக்கிறது.கேது ஞானத்தின் கிரகம் எனப்படுகிறது.
பிள்ளையாரின் பூனூல் நாக வடிவ அடையாளம்.நெற்றிப் பொட்டு சுருள் வடிவ சக்தியின் சின்னம்.இவையெல்லாம் நாகத்தின் உயிர்ச் சின்னமே. இன்றைய விஞ்ஞானம் சொல்வது “மனித உடலில் தலைமுறை நினைவுகள் மரபணுவில் பதிந்திருக்கின்றன.”இந்துக்கள் இதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே குலதெய்வ வழிபாடு, முன்னோர் தர்ப்பணம், குல ஆற்றல் தியானம்,என வாழ்வில் நடைமுறைப்படுத்தியிருந்தனர். வேரை நினைத்தால் ஆற்றல் பெருகும்.மரபணு குல ஆற்றலுடன் பொருந்தும்போது: உடல் நலம், மன அமைதி, பிள்ளைபேறு, வாழ்க்கை செழிப்பு, இவையெல்லாம் நிலைகொள்ளும்.இன்று உலகம் “புதிய அறிவியல்” என்று பார்க்கும் பல உண்மைகள், இந்து மரபின் ஆன்மிக ஞானத்தில் ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்தன.விஞ்ஞானம் இப்போது மட்டுமே மலையின் அடிவாரத்தை அடைந்திருக்கிறது, ஆனால் இந்து ஞான மரபு ஏற்கெனவே சிகரத்தில் நின்று அதை பார்த்துக் கொண்டிருக்கிறது.
– மதுமிதா








Comments are closed, but trackbacks and pingbacks are open.