அங்குசம் சேனலில் இணைய

அமித்ஷா மதுரை வருகையும் அரசியல் கணக்கும் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அமித்ஷா மதுரை வருகையும் அரசியல் கணக்கும் !

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக கூட்டணியின் அரசியல் கணக்கு என்ன? மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக மதுரை வந்த அவர் மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு, தனியார் விடுதியில் பாஜக உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன் தமிழிசை சௌந்தர்ராஜன், எச் ராஜா, வானதி சீனிவாசன், M.L.A, கேச கோவிநாயகம், பேராசிரியர் சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன் முன்னாள் எம்எல்ஏக்கள் முன்னாள் எம்.பிகள், மண்டல தலைவர்கள் உட்பட 22 பேர் கலந்து கொண்டனர். இக்கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இக் கூட்டத்தில்  இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில் பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளுடன் எப்படி இணக்கமாக செயல்படுவது, திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை எப்படி கையாளுவது, மற்றும் பாமக, தேமுதிக, தவெக கட்சிகளை கூட்டணியில் இணைப்பது பற்றி பேசப்பட்டதாக தகவல் வருகிறது.

Amit Shah - Tamilnadu
Amit Shah – Tamilnadu

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மேலும் சமீபத்தில் பாஜகவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்ட நைனார் நாகேந்திரன் செயல்பாடுகள் குறித்தும், முன்னாள் பாஜக மாநில தலைவர் ஆக இருந்த அண்ணாமலை பாஜக நிர்வாகிகளின் புகார்களைப் பற்றி விசாரிப்பதும், இன்னும் ஒரு மாதங்களில் அண்ணாமலைக்கு முக்கியத்துவம் அதிகமாகும் என்ற தகவலும் வருகிறது.

மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வருகின்ற 2026- சட்டமன்றத் தேர்தலில் இந்த முறை குறைந்தது பாஜக 30 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்.

என்றும் பாஜக நிர்வாகிகள் அமித்ஷாவிடம் தெரிவித்ததாக  கூறப்படுகிறது மேலும் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்களின் பட்டியலை தயார் செய்யுமாறு அமித்ஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதிமுக கட்சியை மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த தலைவர்களை ,பாஜக கட்சியை சேர்ந்த யாரும்  விமர்சிக்க கூடாது எனவும் அமித்ஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

ops ttv sasikala
ops ttv sasikala

சமீபத்தில் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்ட நைனார் நாகேந்திரன் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், பாஜகவின் தென் மாவட்ட அரசியல் கணக்கு டிடிவி + ஓபிஎஸ் + சசிகலா ஆகியோரை பாஜக கூட்டணியில் இணைப்பது, மற்றும் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தென் மாவட்டங்களான குமரி, நெல்லை, மதுரை மற்றும்  ராமநாதபுரத்தில் சுயேசையாக  போட்டியிட்ட ஓபிஎஸ், தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட டிடிவி தினகரன் உட்பட தென்மாவட்டங்களில் பாஜக கூட்டணி தென் மாவட்டங்களில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில்  இரண்டாவது இடத்தை 5 தொகுதிகளில் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2021 செப்டம்பர் தேர்தலில் அமுமுக 165 இடங்களில்  போட்டியிட்டு 10,85,985 வாக்குகள் பெற்றது. தென் மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் வாக்குகளை பெற்றது அமுமுக கட்சி.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போது தென் மாவட்டங்களில் மொத்தம் உள்ள 68 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி 50 இடங்களிலும், 18 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

எனவே, பாஜகவின் கணக்கு தென் மாவட்டத்தை கூறி வைத்து நைனார் நாகேந்திரன் + ஓபிஎஸ் + டிடிவி + சசிகலா அரசியல் வியூகத்தை வகுத்துள்ளது.

PMK - DMDK
PMK – DMDK

வட மாவட்டத்தை பொருத்தவரை அதிமுக + பாமக + தேமுதிக என வியூகம் வகுத்துள்ளது. கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை அதிமுக+ பாஜக கூட்டணி 2021 செப்டம்பர் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் மொத்தம் உள்ள 61 சட்டமன்ற  தொகுதிகளில்  அதிமுக கூட்டணி 41 தொகுதிகளிலும், திமுக கூட்டணி வெறும் 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

2026 – சட்டமன்ற தேர்தல்  பாஜகவின் கூட்டணி அரசியல் கணக்கு திமுக கூட்டணியை வீழ்த்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மகிழன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.