அன்பிற்கினிய அமைச்சரின் தொகுதியில் உச்ச அதிகாரிகள் !
மலைக்கோட்டை மாவட்டத்தில் அன்பிற்கினிய அமைச்சரின் தொகுதியில் உள்ள மூன்று ரெவென்யூ அலுவலகத்தில், ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றக்கூடிய உச்ச அதிகாரிகள் மாற்றம், 2 ஆண்டுகளாகியும் இன்னும் மாற்றப்படாமல் இருக்கிறதாம்.
காரணம், அமைச்சரின் செல்வாக்கு அலுவலக வாசல் வரை இருப்பதால், அவருடைய கவனத்துக்கு போகாமல், ஒரு அணுவும் அசையாதாம்.
இதனால் மாவட்டத்தில் உள்ள மற்ற ரெவென்யூ அலுவலக அதிகாரிகள் இடம் மாற்றத்தை எதிர்ப்பார்த்து காலம் கடந்து காத்துக்கிடைக்கின்றனராம்.
-ஸ்பை டீம்