சிறைத்துறை உச்ச அதிகாரியின் மகளுக்கு விரைவில் கல்யாணமாம்.!

0

சிறைத்துறை உச்ச அதிகாரியின் மகளுக்கு விரைவில் கல்யாணமாம்.!

தமிழக சிறைத்துறையின் உச்ச அதிகாரியின் சமீபத்திய அதிரடி நடவடிக்கை சிறைத்துறை வட்டாரங்களை பீதியடைய வைத்துள்ளது.

உச்ச அதிகாரி தொடர்ந்து வெளியிடும் டிரான்ஸ்பர் லிஸ்டினால் பலர் வேலையை விட்டு சென்றுவிடலாம் என்கிற மன நிலையில் இருந்து வருகின்றனராம்.

இதுவரையில் ஐநூறுக்கும் மேலானவர்களை டிரான்ஸ்பர் செய்துள்ள அதிகாரி. தனக்கு கீழுள்ள அதிகாரி யாருடைய சொல்லையும் செவிக்கொடுத்துக்கூட கேட்பதில்லையாம். காரணம், தாமரைக்கட்சியின் செல்வாக்கு தனக்கு இருப்பதால், எல்லோரையும் போட்டு பார்க்கிறாராம்.

இந்த நிலையில் தான்  இந்திய பாரத தந்தையின் அலுவலகத்தில் வேலைப்பார்க்கும் தனது மகளுக்கு திருமண நடத்த முடிவு செய்துள்ளாராம்.

தமிழ்நாட்டில் செட்டிநாடு மாவட்ட காவல் உயரதிகாரி தான் அந்த மாப்பிள்ளையாம்.

-அங்குசம் ஸ்பை டீம்

 

Leave A Reply

Your email address will not be published.