“யார் வேண்டுமானாலும் இனிசியல் போடக்கூடாது” – சொல்கிறார் பாஜக சீனிவாசன்.
மதுரையில் பா.ஜ.க. மாநில பொது செயலாளர் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்து கூறியதாவது._
கவர்னரும், தி.மு.க.வும் புதுகாதலர்களாக இணைந்து செயல்படுவதாக செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். அவரது பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துகொள்ள வேண்டாம். அவர் நகைச்சுவை ரசனைக்காக அவ்வாறு பேசுகிறார். மற்ற மாநிலங்களில் பெய்ததுபோன்று சென்னையில் மழை பெய்யவில்லை.
இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களில் கூட, மழை நீர் செல்வதற்கு வழிவகை செய்து வைத்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் கடந்த பல வருடங்களாக மழைநீர் செல்வதில் பிரச்சினை உள்ளது. அதனை யாராலும் சரி செய்ய முடியவில்லை. இதுவரை ஆட்சி செய்த திராவிட கட்சிகளால், வெள்ள நீர் தேங்காமல் பார்த்து கொள்ள முடியவில்லை.
கல்வி, வரி செலுத்துவது உள்ளிட்ட எல்லா விஷயத்திலும் முதல் இடத்தில் இருக்கிறோம் என தி.மு.க. கூறுகிறது. ஆனால், மழை நீரை கடலில் சேர்க்க முடியாத நிலையில் தான் இருக்கிறார்கள். தமிழகத்தில் மழை பெய்யாமல் இருக்கிறது. அதற்கு மழை கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
மதுரையில் மெட்ரோ பணிகளுக்கு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ அமைப்பதில் 2 வகைகள் உள்ளது. ஒன்று மத்திய அரசின் நிதியில் அமைப்பது. மற்றொன்று மாநில அரசின் நிதியில் அமைப்பது. மதுரையில் மெட்ரோ அமைவதற்காக முழு பொறுப்பை, தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. தற்போது அதனை மத்திய அரசின் நிதியில் அமைப்பதற்கு கேட்டு கொண்டதன் பேரில், தற்போது மத்திய அரசின் நிதியில் அமைக்கப்பட இருக்கிறது.
அதன்படி மதுரை மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிகர் லைட்டர்கள் தடை செய்த விவகாரத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. ஆனால், மு.க.ஸ்டாலினின் முயற்சியால் தடை பெற்றது போன்று துரை வைகோ பேசி வருகிறார். யார் வேண்டுமானாலும் இனிசியல் போடக்கூடாது. பெற்றவர்களின் பெயர் மட்டுமே இனிசியல் போட வேண்டும்.” என்பதாக பேசினார்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.