ஆப்பிள் குலோப் ஜாமுன் ஐஸ்கிரீம்! சமையல் குறிப்பு-55
வணக்கம் சமையலறை தோழிகளே! நீங்க வெயில்ல போயிட்டு வரீங்களா! அப்போ இது உங்களுக்கு தான் ஆப்பிள் குலோப் ஜாமுன் ஐஸ்கிரீம். ஆமாங்க இதுல மூணுமே இருக்கு ஃப்ரூட்ஸ் ஸ்வீட்ஸ் கூலிங்கா ஐஸ்கிரீம். வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ் 5 சிறிய குலோப் ஜாமுன் 1/2 எலுமிச்சம் பழ சாறு 2 டேபிள்ஸ்பூன் பால் பவுடர் 1 கப் ஃப்ரெஷ் க்ரீம்.
அரைக்க:
1/4 கப் கண்டன்ஸ்டு மில்க், 1/2 ஆப்பிள்
ஆப்பிள் கேரமல் செய்ய :
1 டேபிள்ஸ்பூன் தண்ணீர், 1 டேபிள்ஸ்பூன் சர்க்கரை, 1/4 கப் பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகள்.
செய்முறை:
மிக்ஸியில் ஆப்பிள் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து அரைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்… சிறிய கடாயில் பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டு சர்க்கரை தண்ணீர் சேர்த்து ஆப்பிள் கேரமல் ஆகும் வரை வைத்து ஆற வைக்கவும். ஒரு பவுலில் சில் என்று இருக்கும் பிரஸ் கிரீமை சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளவும் படத்தில் காட்டியவாறு எடுக்கும் போது கீழே விழாமல் இருக்க வேண்டும் அதுவரை பீட் செய்து கொள்ளவும். அதன் பிறகு இதில் பால்பவுடர், பொடியாக நறுக்கிய குலோப்ஜாமுன், கேரமல் ஆப்பிள், அரைத்து வைத்துள்ள ஆப்பிள் விழுது, எலுமிச்சை சாறு, வெனிலா எசன்ஸ் சேர்த்து ஒரே ஒரு முறை அனைத்தும் நன்றாக கலக்கும்மாறு மெதுவாக பீட் செய்துகொள்ளவும். பிறகு இந்தக் கலவையை காற்றுப்புகாத கண்ணாடி குடுவை அல்லது டப்பாவில் ஊற்றி குறைந்தது 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். சுவையான அட்டகாசமான குளுகுளு ஆப்பிள் குலோப் ஜாமுன் ஐஸ்க்ரீம் தயார்.
— பா. பத்மாவதி








Comments are closed, but trackbacks and pingbacks are open.