திருச்சி – ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் (மிஷன் வத்சல்யா) ஆற்றுப்படுத்துநர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் (மிஷன் வத்சல்யா) கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கீழ்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆற்றுப்படுத்துநர் (1 பணியிடம்) : தொகுப்பூதியம் – ரூ.18,536/- (ஒரு மாதத்திற்கு)
சமூகப்பணி, சமூகவியல், உளவியல், பொதுநலம் மற்றும் ஆற்றுப்படுத்துதல் துறை ஆகியவற்றில் ஏதேனும் ஒருபிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் (10+2+3மாதிரி) பெற்றிருக்க வேண்டும்.
(Graduate in Social Work / Sociology / Psychology / Public Health / Counselling from a recognized University)
(அல்லது)
ஆற்றுப்படுத்துதல் மற்றும் தொடர்புபிரிவில் முதுகலை பட்டயபடிப்பு பெற்றிருக்க வேண்டும்.
(PG Diploma in Counselling and Communication)
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அரசு/தொண்டு நிறுவனத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பணியில் 1 வருடபணி அனுபவம் இருக்க வேண்டும். கணினி இயக்குவதில் ஆற்றல் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். 31.10.2024 அன்றுபடி 42 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சுயசான்றொப்பமிட்ட கல்விச்சான்றுகளின் நகல். சுயசான்றொப்பமிட்ட பணி அனுபவசான்றுகளின் நகல்
மேற்ண்ட பதவிக்கான விண்ணப்படிவத்திை https://tiruchirappalli.nic.in/ என்ற இணையதளத்தில் இருத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள் 07.12.2024 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு வந்து சேரும் வகையில் (நேரிலோ/தபால் மூலமாகவோ) அனுப்பப்பட வேண்டும்.
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, N.E.1,முதல் தளம், மெக்டொனால்டு ரோடு, கலையரங்கம் வளாகம், திருச்சிராப்பள்ளி – 620 001.
மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.