ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய புள்ளி சம்போ செந்தில் ஸ்கெச் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய புள்ளி சம்போ செந்தில் கைது !  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திருவேங்கடம் என்பவர் என்கவுன்டர் செய்யப்பட்டார். ஏற்கெனவே, கைதான வழக்கறிஞர் ஹரிகரன் அளித்த வாக்குமூலத்தில் அடிப்படையில், ரவுடி சம்போ செந்திலுக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதற்கு இடையில் சென்னை திருவொற்றியூரில் ஒப்பந்ததாரர் கார்த்திக்கை மிரட்டிய புகாரில் சம்போ செந்தில் உள்பட 13 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். பிரபல ரவுடி சம்போ செந்தில், அவரது கூட்டாளிகள் சரவணன், கிருஷ்ணன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி மின்ட் ரமேஷிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். பாஜக பிரமுகராக இருந்தவர் மின்ட் ரமேஷ். இவருடைய வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Arun IPS
Arun IPS

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இந்த நிலையில்… பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் தொடர்பான போட்டியில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது செந்தில் தலைமைகளாக இருக்கும் நிலையில் அவரை பிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை பிடிக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டிஸும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போலி பாஸ்போர்ட் மூலம் சம்போ செந்தில் வெளிநாடு தப்பி சென்றிருக்கலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சம்போ செந்தில் பதுங்கி இருந்த போது தமிழக போலீஸ் சுற்றி வலைத்து இருக்கிறது.

யார் இந்த சம்போ செந்தில் 

சம்போ செந்தில் – ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – விலகும் மர்மங்கள்!

தற்போது சம்போ செந்தில் என்று ஒரு பெயர் பெரிதும் அடிபடுகிறது.. அவர் யார்???

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

சம்போ செந்தில் என்ற செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து கிராமத்தை சேர்ந்தவர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சட்டக்கல்லூரியில் வழக்கறிஞராக படித்தவர். அதன் பிறகு வடசென்னை தண்டையார்பேட்டையில் அலுமினிய பாத்திர பிசினஸ் மற்றும் சாக்லேட் வியாபாரம்  செய்தவர். இவர் வெங்கடேச பண்ணையாரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கடேச பண்ணையாரின் என்கவுண்டரில் இந்த செந்தில் குமாருக்குக்கு வெங்கடேச பண்ணையாரை காட்டிக் கொடுத்ததில் பங்கு உண்டு என்றும் சொல்லப்படுகிறது . 90களில் தென் சென்னையில் ரவுடி அயோத்தியா குப்பம் வீரமணி போல வடசென்னையில் கோலோச்சியவர் மாலைக் கண் செல்வம்.

இவர் அப்போது சென்னை ஹார்பரை முழுமையாக தன்கண்ட்ரோலில் வைத்திருந்த ஒரு பெரும் ரௌடி. சினிமாவில் வருவதை போல போவோர் வருவோருக்கு இடைஞ்சல் கொடுத்து நடு வீதியில் வைத்து செஸ் விளையாடுவது கேரம் விளையாடுவது எல்லாம் இவரின் செயல். அவரின் வலது கரமாக இருந்தவர் கல்வெட்டு ரவி. கல்வெட்டு ரவி தற்போது பாஜகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.

எல்.முருகனுக்கும் அண்ணாமலைக்கும் நெருக்கம். மாலைக்கண் செல்வத்திற்கு வழக்கறிஞராக சென்று அதன் பிறகு மாலைக்கண் செல்வத்திற்கும் கல்வெட்டு ரவிக்கும் பல சம்பவங்களுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்து துணையாய் இருந்தவர் தான் சம்போ செந்தில். கொஞ்சநாளில் மாலைக்கண் செல்வம் திருந்தி வாழ ஆரம்பித்தவுடன் மொத்தமாய் வடசென்னையை குத்தகைக்கு எடுத்தவர் கல்வெட்டு ரவி. அவரின் வலக்கரமாக செயல்பட்டு அவரோடு சேர்ந்து பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்பு உள்ளவர் தான் செந்தில்.

அதோடு வழக்கறிஞரான செந்தில், பற்பல ரௌடிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டு வந்தவர். ஒருகட்டத்தில் அதாவது 2016-2020 காலகட்டத்தில் தனக்கென்று தனி நெட்வொர்க்கை ஏற்படுத்தி அவரே ரவுடியாக ஃபார்ம் ஆகி பிரபல தாதாவாகி இருக்கிறார். செந்திலைப் பொறுத்தவரை எந்தச் சம்பவத்துக்கும் நேரில் வர மாட்டார்.

ஆனால் கொலை, ஆள் கடத்தல் சம்பவங்களுக்கான ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பதில் கில்லாடி. அவர் போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச் மிஸ்சே ஆகாமல் சம்பவம் நிகழ்த்தப்ப்படுமாம். அதன் காரணமாக சம்பவம் செந்தில் என்று அழைக்கப்பட்டு வந்தவர், பேச்சுவழக்கில் சம்போ செந்தில் என்று ரவுடிகள் மத்தியில் அழைக்கப்படுகிறாராம்.

கடந்த 2020 ஆம் மார்ச் மாதம் காக்கா தோப்பு பாலாஜி மற்றும் ரவுடி சிடி மணி ஆகியோர் சென்ற கார் மீது வெடிகுண்டு வீசியதில் சம்போ செந்தில் தான் மூளையாக செயல்பட்டார். 2016-2020ல் பல கொலைகளுக்கு நேரிடையாக ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்து பெரிய தாதாவாக மாறி இருக்கிறார் செந்தில்.

சரி ஆம்ஸ்ட்ராங் கிற்கும் சம்போ செந்திலுக்கும் என்ன பிரச்சனை?? கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் தொழில் இந்த Scrap பிசினஸ் தொழில். அதில் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கும் சம்போ செந்திலுக்கும் தொழில் போட்டி இருந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். அதோடு திருவள்ளூரில் ஒரு பெரிய நிலத் தகராறிலும் இவருவருக்கும் மோதல் இருந்திருக்கிறது.

அப்போதுதான் முன்பே ஆம்ஸ்ட்ராங் மீது முன் விரோத கொலைவெறியில் இருந்த அதிமுக மலர்க்கொடி, அதிமுக ஹரிதரன், தமாகா ஹரிஹரன் பாஜக அஞ்சலை ஆற்காடு சுரேஷ் தம்பி புன்னை பாலு, ஆருத்ரா என்று அனைவரும் ஒரு புள்ளியில் இனைந்து சம்போ செந்தில் தலைமையில் திட்டம் தீட்டில் இந்த படுகொலையை நிகழ்த்தி இருக்கிறார்கள். போலீசை ஏமாற்றி தப்பிப்பதில் இந்த சம்போ செந்தில் பலே கில்லாடி.. இதுவரை இவனை கைது செய்ததில்லை.. எந்த வழக்கிலும் சிறைக்கு சென்றதில்லை.. இவனது புகைப்படம் கூட ஒன்றிரண்டை தாவிய வேறு எதுவும் இல்லை. ஆனால் இந்த முறை சென்னை கமிசனர் அருண் சம்போ செந்திலை கைது செய்து சரித்திரம் படைக்கும்..

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.