ரூ.50 ஆயிரம் மானியத்துடன்  , ரூ3 லட்சம் வரை கடன் ! “கலைஞர் கைவினைத் திட்டம்’  ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இத்திட்டம், குடும்ப தொழில் அடிப்படையில் இல்லாமல் 25 கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள்  (டிசம்பர் 11) முதல் வரவேற்கப்படுகின்றன. கலைஞர் கைவினைத்திட்டத்திற்கான அரசாணை சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

கைவினைக் கலைகள்அதில் , பொம்மை தயாரிப்பு, மலர் வேலை, தையல் தொழில், மரவேலைகள், படகு தயாரித்தல், உலோக வேலை, மண்பாண்டம், கூரை முடைதல், கட்டிட வேலை, கயிறு பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், பாசிமணி வேலைப்பாடு, பனை ஓலை, பிரம்பு வேலைப்பாடு, ஓவியம் வரைதல், வர்ணம் பூசுதல், துணி கலைவேலைபாடுகள், நகை செய்தல், சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை, துணி வெளுத்தல், பொம்மை தயாரிப்பு என 25 வகையான தொழில்களுக்குக் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இத்திட்டம், குடும்ப தொழில் அடிப்படையில் இல்லாமல் 25 கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இத்திட்டத்தின் மூலம் புதிய தொழிலை தொடங்கவும், செய்யும் தொழிலை நவீன வடிவில் மேம்படுத்தவும் கடன் உதவிகளும், திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும். இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை கடனுதவி பெறலாம். 25 சதவீத மானியமாக அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும். மேலும், 5 சதவீதம் வரை வட்டி மானியமும் உண்டு. 35 வயது நிரம்பியவர்கள் இந்த தொழில் வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தகுதியான விண்ணப்பதாரர்களை அந்தந்த மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் தலைமையிலான குழு சரிபார்த்து வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும். தமிழகத்தில் உள்ள கைவினைக் கலைஞர்கள் இத்திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

– மணிகண்டன்.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.