ரேஷன் கடையில் தரமற்ற பிளாஸ்டிக் அரிசியா? மதுரை ஆட்சியரிடம் முறையிட்ட பா.ஜ.க.வினர் !
விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் மாதந்தோறும் நியாய விலை கடைகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தில் உள்ள சமத்துவபுரத்தில் நியாய விலை கடைகளில் சமீபத்தில் வழங்கப்பட்ட விலையில்லா அரிசி மிகவும் தரம் குறைந்ததாகவும், தண்ணீரில் மிதக்கும் வகையிலும் பிளாஸ்டிக் அரிசி போன்றும் உள்ளதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் என பாஜக மதுரை மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் தலைமையில் அரிசியுடன் வந்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது .
“மழை காலங்களில் தொற்று நோய் பரவி வரும் இந்த வேளையில் இத்தகைய தரமற்ற அரிசிகளை சமைத்து உண்டால் வயிற்று கோளாறு மற்றும் உயிரிழப்பு ஏற்படக்கூடிய அபாய நிலை உள்ளது என்பதால் ரேஷன் அரிசியில் தொடர்ந்து கலப்படம் செய்யப்பட்டுள்ளது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பதாக அப்புகார் மனுவில் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
– ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.