அங்குசம் சேனலில் இணைய

பலராம அவதாரம் – ஆன்மீக பயணம்

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பெருமாளின் அவதாரங்களில் இது எட்டாவது அவதாரம் ஆகும். கோகுலத்தில் விஷ்ணுவின் அம்சமாக வசுதேவருக்கு பிறந்த பிள்ளை பலராமன். பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது. ராம அவதாரத்தில் தம்பியாக இருந்த லட்சுமணன் தனக்கு அண்ணனாக விஷ்ணு ஏற்றதாக கூறுவர். அசுரர்களே அரசு பரிபாலனம் செய்தனர் என்றாலும் அவர்களை விட்டு ஆணவம் குறையவில்லை. அதனால் அவர்களுடைய பாரம் பூமி தேவியை வருத்திட்டு அவள் தன் குறையை பிரம்ம தேவனிடம் முறையிட்டாள். பிரம்மா பாற்கடலுக்கு போய் புருஷ சக்தம் என்ற மந்திரத்தால் தேவர்களுடன் கூடி பரந்தாமனை துதித்தார். அப்போது ஓர் அசரீரி வாக்கு அவர்களுக்கு கேட்டது பிரம்ம தேவனே! தேவர்களே! பூமியின் துயரத்தை நான் அறிவேன். தேவர்கள் யதுகுலத்தில் பிறக்கட்டும்! தேவமாதரும் கோபியராக அங்கு ஜனனம் செய்யட்டும். நீங்கள் யதுக்கு குலத்தில் பிறந்து என் வரவுக்காக காத்திருங்கள்! என்று கட்டளை பிறந்தது.அதன் பின் தன் லோகத்திற்கு அவர்கள் போயினர். அசுர சேனன் என்ற அசுரன் மதுரையை ஆண்டு வந்தான்.

மந்த்ரா என்றும் மதுரையை கூறுவார்கள் அவன் தம்பி பெயர் உக்கிரசேனை அவன் மகன் கம்சன் ராஜகுமாரி ஆகிய தேவகிக்கும் வசுதேவர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் ஆனதும் தம்பதியினர் திருமண மண்டபத்திலிருந்து ஊர்வலமாக வீடு திரும்ப ரதத்தில் ஏறினார்கள். அந்த ரதத்தை ஓட்டுவதற்கு தேவகியின் சிற்றப்பா மகனும் அண்ணனும் ஆன கம்சன் குதிரையின் கடிவாளத்தை கையில் பிடித்தான். ஊர்வலம் சீரும் சிறப்புமாக மங்கள வாத்தியங்கள் முழங்க நடந்து கொண்டிருந்தது. அப்போது கம்சனுக்கு ஒரு அசரீரி கேட்டது மதியற்றவனே! கம்சா கேள்! உன் தங்கை தேவகிக்கு நீ ரத சாரதியாக இப்போது இருக்கிறாய். அந்த ராஜ குமாரியின் எட்டாவது குழந்தை உன் உயிரை வாங்க போகிறது என்று அசரீரி சொல்லியது. அப்போதே கம்சன் தேவகியை கொன்றுவிட்டால் தன் மரணப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும் என்று வாலை உருவி அவளை கொல்லப் போனான். அப்போது தேவகியை மணந்த வசுதேவன் கம்சனிடம் நல்ல வார்த்தை சொல்லி நீ என் மனைவியாகிய புது மணப்பெண்ணை மணக்கோலம் கலையாது இருக்கும் கன்னிகையை கொல்லும் பாவம் மிகவும் கொடியது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பலராமன்
பலராமன்

மேலும் அசரீரி இவளுக்கு பிறக்கும் குழந்தைகளால் தானே உனக்கு மரணம் வரும் என சொல்லியது நான் இவளுக்கு பிறக்கும் குழந்தைகளை உன்னிடம் கொடுத்து விடுகிறேன் நீ அவற்றை உன் இஷ்டப்படி வதம் செய்வதானால் செய்து கொள் என்று தன் மனைவிக்கு வந்த ஆபத்தை நீக்கிக் கொண்டார். சிசுக்கள் பிறந்ததும் இதைப்பற்றி முடிவு செய்து கொள்வோம் என்று வசுதேவர் தீர்மானித்து அப்படி சொன்னார். அதனால் சினம் தணிந்த கம்சன் தேவகியை விட்டு விட்டான். ஒரு நாள் நாரதன் கம்சனை சந்தித்து ஆயர்பாடியில் தேவர்கள் அவதரித்து இருக்கிறார்கள். அவர்களுடைய தலைவன் நந்தனும் யாதவரும் உனக்கு பகைவர் என்று சொல்லி புவியின் பாரம் தீர தந்திரமாக வசு தேவரையும் தேவகியையும் சிறையிட்டான். அவர்களுள் தன் தந்தை உக்கிரசேனனையும் சிறையில் அடைத்து ராஜ்யத்தையும் தான் ஏற்றுக் கொண்டான். தன் அசுரன் நண்பர்களுடன் சேர்ந்து யது குலத்தாரை அழிப்பதிலேயே குறியாக இருந்தான்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அதனால் யதுக்கள் பயந்து வேற பல நாடுகளில் போய் தங்கினார்கள். தேவகிக்கு பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான். ஏழாவது சிசுவை தேவகி கருத்தரித்தால் அந்த கருவில் ஆதிசேஷனே உருவானான். அச்சமயம் மகாவிஷ்ணு தனது யோக மாயை மூலம் ஓர் ஏற்பாடு செய்தார். அவர் தேவியை வரவழைத்து தேவி! வசுதேவருக்கு ரோகிணி என்ற வேறு மனைவி உண்டு. அவளை அவர் ஆயர்பாடியில் ரகசியமாக ஒளித்து வைத்திருக்கிறார். மதுராபுரியில் சிறையில் வாடும் தேவதையின் வயிற்றில் ஆதிசேஷன் கரு கொண்டு இருக்கிறான். நீ அந்த குழந்தையை ரோகினியின் கர்ப்பத்திற்கு மாற்றிவிடு அத்துடன் நீ நந்தகோபன் மனைவி யசோதையிடம் பெண்ணாக பிறக்க வேண்டும். நான் தேவகியின் வயிற்றில் திரு அவதாரம் செய்யப் போகிறேன். இதனை சகல மனோ புஷ்பங்களையும் அளிப்பதற்கு காரணமானவனாக ஈஸ்வரியாக, காளி, வைஷ்ணவி என்றும் பின்னர் மக்கள் உன்னை வழிபடுவார்கள் என்றார்.

பரந்தாமன் கட்டளையின்படி மாயாதேவி தேவகியின் கர்ப்பத்திலிருந்து குழந்தையை ரோகினி கர்ப்பத்திற்கு மாற்றினாள். தேவகியின் கர்ப்பம் அவள் சிறையில் வாடும் வேதனையினாலும் கம்சன் தரும் தொல்லைகளாலும் சிதைந்து போய்விட்டது என்று அனைவரும் கம்சனை ஏசினார்கள். இச்சமயம் ரோகினியின் மைந்தனாக ஆதிசேஷன் பிறந்தான். அவனுக்கு யதுக்குல குருவாகிய கர்கர் மிகவும் ரகசியமாக பசு மடத்தில் சடங்குகளை செய்து ராமன் என்று பெயரிட்டார். ராமன் என்றால் சமிக்க செய்வான். தவிர இவன் நல்ல பலசாலியாக இருப்பான் என்பதால் இவனை பலராமன் என பெயரிட்டு அழைப்போம் என்றார் கர்கர். நரகாசுரனை வதம் செய்த நாளை தான் நாம் தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்று ஒரு சிலர் சொல்வதுண்டு. அந்த நரகாசுரனுக்கு துவி விதன் என்ற ஒரு வாரத் தலைவன் இருந்தான் அவனுக்கு மயிந்தன் என்ற சகோதரன் உண்டு. கிருஷ்ணன் நரகாசுரை கொன்றதைக் கண்டு வாரத்தலைவன் கடும் கோபம் கொண்டான். அவன் தான் எப்படியும் கிருஷ்ணனை கொன்று விடுவதாக சொல்லி பல அட்டகாசங்களை செய்தான்.

சகோதரர்கள்
சகோதரர்கள்

அந்த வைராக்கியத்தால் நேரே கோவர்த்தன கிரியை அடைந்தான். அங்கே தவம் செய்து கொண்டு இருந்த மகரிஷிகளை அவன் அடித்தும் உதைத்தும் இம்சை செய்தான். அந்த நேரத்தில் ரைவத மலையில் பலராமன் கோப்பியர்களுடன் ஆனந்தமாக விளையாடி கொண்டிருந்தான். அதைப் பார்த்த வாரைத் தலைவன் பலராமன் மீது பாய்ந்தான். அவன் அணிந்திருந்த பட்டு பீதாம்பரத்தை பற்றி இழுத்து கிழித்தான். சுக்கல் சுக்கலாக கிழித்து தூர எறிந்தான். மரத்தை வேரோடு பிடுங்கி பலராமனுடன் இருந்த கோபியர்களை அடித்து விரட்டினான். இதை பார்த்ததும் பலராமனுக்கு கோபம் வந்தது. உடனே வாரையை கட்டிப்பிடித்தான் அச்சமயம் அவன் பலராமனை முஷ்டிகளால் குத்தி தள்ளி துன்புறுத்தினான். ஆனால், பலராமனோ அவனைப் பிடித்து கை முஷ்டிகளால் அவன் தலையில் ஒரு குட்டுக் குட்டினான்.

அந்த சனத்திலேயே அவன் மூக்கிலும் வாயிலும் ரத்தம் ஒழுக அந்த இடத்திலேயே இறந்தான். இதேபோல கோவர்த்தனகிரியில் பலராமன் கண்ணனுடன் மாடு மேய்த்து வந்தான். அப்போது ஸ்ரீ தாமன் என்ற சிறுவன் வேகமாக பலராமன் கண்ணனிடம் ஓடி வந்தான். பலராமா! கண்ணா! இந்த இடத்தில் மழைச்சாரலை கடந்து நாம் மழைக் காட்டிற்குள் போனால் அங்கே அநேக பனை மரங்களை காணலாம். அந்த பனை மரத்தின் அடியில் பழங்கள் உதிர்ந்து கிடப்பதை பார்க்க முடியும் ஆனால் நாம் அங்கே போக முடியாது காரணம் தேனுகன் என்ற அரக்கன் அந்த வனத்தை காத்து வருகிறான். அவன் கழுதை வேடம் போட்டுத் திரிந்தான். அவனை சேர்ந்தவர்களும் அது மாதிரியே அவனுடன் காட்டைச் சுற்றி வருகிறார்கள் அவனுக்கு மனித மாமிசம் என்றால் மிகப் பெரியம். அவன் பக்கத்தில் போனவர்களை பிடித்து அடித்து தின்று விடுவான்.

எனினும் அவன் வசிக்கும் பனைக் கூட்டத்தின் மத்தியில் சிந்தி சிதறி கிடக்கும் பழங்களின் வாசனை தான் இது. கண்ணா அந்தப் பழங்களை எப்படியாவது எடுத்து வந்து எங்களுக்கு கொடுப்பாயாக! என்று ஸ்ரீ தாமன் கேட்டான். இதைக் கேட்ட பலராமனும் கண்ணனும் சிரித்தார்கள். வாருங்கள் நாம் எல்லோரும் பனங்காட்டிற்கு செல்லலாம் என்று கண்ணன் சொல்லவே கோகுல சிறுவர்களும் பலராமனும் அவனுடன் சேர்ந்து அங்கே போனார்கள். இவர்கள் பேசியதை கேட்ட தேனுகன் அங்கே வேகமாக ஓடி வந்து பலராமனை தாக்க ஆரம்பித்தான். கழுதை ஆகிய அவன் தன் பின்னங்கால்களால் பலராமனை உதைத்தான். பலராமனோ கழுதையின் காலை பிடித்து இழுத்து அப்படியே உயரே தூக்கி சுழற்றினான். அப்படி பலமுறை சுழல விட்டு அவன் சடலத்தினை பனை மரத்தின் மீது வீசினான். அந்த மரம் எல்லாம் அடுத்து இருந்த மரங்களும் அவனோடு பூமியில் சரிந்தன. இவ்வாறு பலராமனும் கிருஷ்ணனும் அரக்கர் கூட்டத்தை அழித்து ஒழித்தனர்.

பலராமனும் கண்ணனும்
பலராமனும் கண்ணனும்

ஒரு சமயம் பலராமனும் கண்ணனும் தட்டாமாலை சுற்றி விளையாட்டினார்கள். எல்லாரையும் ஆடச் செய்து கண்ணன் பாடுவான் எல்லோரும் வீழ்வப்பழம் பறித்து பந்தாடுவார்கள் இவ்வாறு அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது பிரலம்பன் என்ற ஓர் அரக்கன் கோகுல சிறுவனை போல் உருமாறி அவர்களுடன் விளையாட வந்தான். இவனுடைய சூழ்ச்சியை கண்ணன் தெரிந்தும் தெரியாதது போல நடந்து கொண்டான். கண்ணன் தன் சகாக்களை அழைத்து சொன்னான் நண்பர்களே! நாம் இப்போது இரண்டு காட்சிகளாக பிரிவோம். ஒரு கட்சிக்கு பலராமன் தலைவன் மற்றொரு கட்சிக்கு நான் தலைவன் ஒரு பந்தயம் கட்டி விளையாடுவோம் யார் ஜெயிக்கிறார்களோ அவனை தோல்வி அடைந்தவன் தூக்கி சுமக்க வேண்டும் என்றான். எல்லோரும் ஆமோதித்து ஓர் ஆலமரத்தில் ஓடிப் பிடித்து விளையாடினர்.

ஓடி விளையாடிய ஓட்டப்பந்தயத்தில் பிரலம்பன் பலராமனிடம் தோற்றான். ஆகவே அவன் பலராமனை தூக்கி சுமந்து ஓடினான். அப்படி ஓடியவன் ஓர் எல்லைக்குள் வந்து அவனை இறக்கி விட வேண்டியவன் பலராமனை கீழே இறக்காமல் ஓடிக்கொண்டே இருந்தான். ஆனால் ஓட ஓட பலராமன் பாரம் அரக்கன் ஆகிய பிரலம்பனுக்கு அதிகரித்துக் கொண்டே இருந்தது. சுமை தாங்க மாட்டாமல் அரக்கன் பலராமனை கீழே போட்டான். தன் சுயரூபம் எடுத்து ஆகாயம் வரை உயர்ந்து நின்றான். உடனே பலராமன் எகிரி குதித்து விண்ணுயரம் நின்ற அரக்கன் தலையில் நச்சு என்று ஓங்கி ஒரு குத்து விட்டான். அந்த இடத்திலேயே பிரலம்பன் மலை என சாய்ந்தான். ஒரு நாள் இரவில் கண்ணனும் பலராமனும் ஆயர்பாடி பெண்களுடன் பிருந்தாவனத்தில் விளையாடி கொண்டு இருந்தார்கள். அந்நேரம் குபேரனுடைய சேவகன் சங்கசூடன் வந்தான். அவன் கோபிகளை வடதிசை நோக்கி துரத்தினான். பலராமனை மங்கையறை காத்து நிற்கும்படி கண்ணன் சொல்லிவிட்டு கண்ணன் அங்கு சங்கு சூடனை துரத்திச் சென்றான். அவனை வதம் செய்து அவன் கிரீடத்தில் அணிந்திருந்த ரத்தினத்தை எடுத்து கண்ணன் பலராமனுக்கு கொடுத்தான்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

மகா பாரதத்தில் பலராமன்:

பல ராமனுடைய மனைவியின் பெயர் ரேவதி. ரைவத நாட்டை ஆண்டு வந்த அரசன் ரைவதன் என்பவருடைய மகள் இவள். பிரம்மதேவர் விருப்பப்படி பலராமருக்கு ரேவதியை மணம் செய்து வைத்தான். அவள் வயிற்றில் பிறந்தவள் வத்ஸலா. வத்ஸாலவை துரியோதனன் தன் மகன் லெட்சணனுக்கு திருமணம் செய்துவிட்டால், பலராமனும் அவரது தம்பி கிருஷ்ணரும் தங்கள் பக்கம் சேர்ந்து விடுவார்கள் என்றும் இதனால் பாண்டவர்களை போரில் எளிதில் வென்று ராஜ்யத்தை அவர்களிடம் கொடுக்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்றும் துரியோதனன் நினைத்தான். இந்த திருமணம் பேசி முடிப்பதற்காக தன் மாமா சகுனியை துவாரகைக்கு அனுப்பி வைத்தான். துரியோதனன் சகுனி துவாரகைக்கு வரும் வழியில் துர் சகுனங்கள் தோன்றின. அவைகளை பொருட்படுத்தாமல் அவன் பலராமனை சந்தித்தான்.

சாதுரியமாக அவன் விஷயத்தை எடுத்துச் சொன்னான். பலராமனும் இது பற்றி தன் மனைவி ரேவதியை கலந்து பதில் சொல்வதாக சொன்னான். அவன் அதற்கு சம்பந்தம் தெரிவித்தாள். ரேவதி சம்மதம் தந்ததால் பலராமன் தன் தம்பி கிருஷ்ணனை கலந்தான். அத்துடன் வத்ஸலையை இலட்சணன் திருமணம் செய்து கொள்வதில் தனக்கும் தன் மனைவி ரேவதிக்கும் மிகத் திருப்தி என்றும் பலராமன் கிருஷ்ணனிடம் சொன்னான். அப்போது கிருஷ்ணன் அண்ணா! தர்மத்தை பரிபாலிக்க சிம்மாசனமும் செங்கோலும் கொண்ட நாமே தர்மத்தை பரிபாலிக்காமல் கைவிட்டால் தர்மம் எப்படி தழைத்து ஓங்கும்! நான் ஒரு நிகழ்ச்சியை உன் ஞாபகத்திற்கு கொண்டுவர வேண்டியவனாக இருக்கிறேன். முன்பு ஒருநாள் நம் தங்கை சுபத்ரா தேவி தன் புதல்வன் அபிமன்யுவை அழைத்து வந்திருந்தாள் நாம் எல்லோரும் அன்று அந்தி சாய்கிற நேரத்தில் பூங்காவனத்தை சுற்றி வந்தோம்.

அப்போது அபிமன்யுவும் வத்ஸலாவும் சதி பதிகளாக விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இதைக்கண்ட சுபத்திரை அவர்கள் விளையாட்டின் வித்தையை உன்னிடம் சுட்டிக் காட்டினாள். அப்போது நீ என்ன சொன்னாய் ஞாபகம் உனக்கு இருக்கிறதா? அண்ணா என்று வாசுதேவன் கேட்டான். ஏதோ ஒன்று இரண்டு ஞாபகத்திற்கு வருகிறது இருந்தாலும் நான் என்ன சொன்னேன் என்பதை இப்போது நீ தான் நினைவுபடுத்துவதில் என்ன தவறு என்று சொன்னான் பலராமன். இதைத்தொடர்ந்து கிருஷ்ணன் சொன்னான் அண்ணா அருமை தங்கை சுபத்திரை இந்த இரண்டு பேரும் தம்பதிகளே! இதில் என்ன சந்தேகம் மேலும் வத்ஸலையை உன் மகன் அபிமன்யுவுக்கு பாணி கிரகணம் செய்து கொடுப்பது சத்தியமே! என்று வாக்கு கொடுத்தீர்கள். அந்த நேரம் நம்மிடையே நாரத முனிவரும் எழுந்தருளி இருந்தார். அப்போது அவர் பலராம சக்கரவர்த்தியே! நீர் இப்போது வாக்கு கொடுத்து நிறைவேற்றுவது தான் சத்தியம் செய்வதற்கு அழகு என்றார். நீ உடனே ஒருநாளும் நான் வாக்கு மாற மாட்டேன் என்று கூறிவிட்டு இப்போது உன் சத்தியத்தை காற்றில் பறக்க விடலாமா? என கிருஷ்ணன் வினவினான்.

மகா பாரதத்தில் பலராமன்
மகா பாரதத்தில் பலராமன்

அதைக் கேட்ட பலராமன் கேசவா நான் சொல்லும் வேளையில் பாண்டவர்கள் இந்திர பிரஸ்தத்தில் பூபதிகள் ஆக இருந்ததால் அவ்வண்ணம் சொன்னேன். இப்போது அவர்கள் தங்கள் ராஜ்ஜியம் சொத்து, சுகம் இழந்து வனவாசத்தில் அல்லவா இருக்கிறார்கள். நமது சகோதரி மகன் அபிமன்யு நம் சிற்றப்பா விதுரர் போஜனையில் வளர்ந்து வருகிறான். இந்த நிலையில் நம் மகள் வத்ஸாலவை அவனுக்கு கொடுக்க யார் சம்மதிப்பார்கள் என்றான். உடனே கிருஷ்ணன் சொன்னான் அண்ணா! இனி உங்கள் விருப்பம். அண்ணியும் இதற்கு சம்மதிக்கிறாள் என்னும்போது நான் மேலும் வீண் விவாதம் செய்வதில் பயனில்லை. எல்லாம் பகவத் சங்கர்பம் போல் நடக்கும் என்பதை மறந்து விடாதே! என்று பதில் சொல்லிவிட்டு வாசுதேவன் அந்தப்புரத்திற்கு போய்விட்டான். சகுனியும் பலராமனும் கிருஷ்ணன் அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். மீண்டும் சகுனி இடம் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று திருமணத்திற்கு லக்ன பத்திரிக்கையை கொடுத்து அனுப்பினான்.

அதை கைப்பற்றியதும் சகுனிக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவு இல்லை. அஸ்தினாபுரத்திற்கு திரும்பி நடந்த விவரங்களை துரியோதனனிடம் சொன்னான் சகுனி. முகூர்த்த லக்ன பத்திரிக்கையும் பார்த்து துரியோதனன் அதிக சந்தோஷம் கொண்டிருந்தான். உடனே உறவினர்களுடன் திருமணம் பேசி முடிப்பதற்காக பலராமன் இருப்பிடத்திற்கு சென்றான். செல்லும் வழியில் கிருஷ்ணரின் தங்கை சுபத்திரைக்கு இந்த விஷயத்தை ஒரு மடலில் எழுதி அனுப்பி விட்டான். இதை கேள்விப்பட்ட சுபத்திரையும் அவளது மகன் அபிமன்யுவும் ஒரு தேரில் பலராமனை தேடிச் சென்றனர். செல்லும் வழியில் கடோத்கஜன் அபிமன்யுவை கொன்றான். இருந்தாலும் பராசக்தியின் கருணையால் கிடைத்த அமுத கலசத்தினால் அபிமன்யு மீண்டும் உயிர் பெற்றான். பின்னர் கடோத்கஜன் பீமனின் மகன் என்பது தெரிய வந்ததும் இருவரும் கிருஷ்ணரின் மாளிகைக்கு சென்றனர். அவர்களுடன் கடோத்கஜனின் இஷ்ட தேவதை யான ஜாங்கிலியும் சென்றது.

வாசுதேவன் அவர்களை வரவேற்று மகிழ்ந்து ஆசி கூறினார்.ஹே கடோத்கஜா! ஜாங்கிலி! நீங்கள் இரண்டு பேரும் என் அரிய பக்தர்கள். ஆகவே உங்கள் விருப்பப்படி அபிமன்யு வத்ஸலா திருமணம் நடைபெற்று விடும். எனினும் அதை நீங்கள் தான் முன் நின்று செய்ய வேண்டும். அதற்கு முன்பு ஒரு சில காரியங்களை செய்ய வேண்டும் என்றார். அவர்கள் தங்கள் கட்டளையை சிரம் மேல் தாங்கி செய்கிறோம் என்று சொன்னார்கள். என் அண்ணா பலராமர் அந்தப்புரத்தில் ரேவதி தேவியின் அருகில் அருமை குழந்தை வத்ஸாலா படுத்து கிடந்தாள். அவளை அங்கிருந்து எடுத்துக்கொண்டு சுபத்திரை இடம் சேர்த்து விடுங்கள். அண்ணா அரண்மனையில் அமைந்திருக்கும் திருமண பந்தலை உங்களைச் சேர்ந்த அரக்கர்கள் கொண்டு அழகாக தூக்கி ரைவத மலைச்சாரலுக்கு கொண்டுவந்து நிறுத்தி விடுங்கள். அப்புறம் என் சங்கல்பத்திற்கு விரோதமாக வந்திருக்கும் துரியோதனன் ஆகியவருக்கு உங்கள் இஷ்டம் படி அவர்கள் பாடம் கற்கும் படி மானபங்கம் செய்து விடுங்கள்.

பின் தேவலோக த்திலிருந்து திருமண காரியங்களுக்கு புரோகிதம், வேள்வி, மேல தாளங்கள் உள்பட அங்கு வரும்படி செய்கிறேன். அந்த தேவர் குலம் வந்ததும் எனக்கு தெரியப்படுத்துங்கள். நானும் ருக்மணி தேவியும் அங்கு வந்து யாகத்தை முடித்துக் கொடுக்கிறோம் என்றார். வாசுதேவர் கூறியபடி காரியங்களை நிறைவேற்றி விட முனைந்தனர். துரியோதனன் அவன் பட்ட மகிஷி பானுமதி தங்கி இருக்கும் மாளிகைக்கு சென்றார்கள். அங்கு உள்ள பானுமதியின் தாதியாரை கண்டு அவர்களைப் போல மாற்றுரு கொண்டு நேரே பலராமர் ரேவதி அந்தப்புரத்திற்குள் நுழைந்தனர். அங்கு அவளை தட்டி எழுப்பினார்கள். அம்மா எஜமானி! நாங்கள் கௌரவ பட்டத்தரசி பானுமதி தேவியின் தாதிகள். அம்மா இதோ ஒரு சில நகைகளை கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள். இதை பெண்ணுக்கு போட்டுப் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆகவே பெண்ணிற்கு இந்த நகைகளை அணிவித்து அவளை பானுமதி தங்கி இருக்கும் மாளிகைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறினார்கள். ரேவதி அதற்கு அனுமதி தெரிவித்தாள் உடனே வத்ஸலை அந்தப்புரம் சென்று வந்த விஷயத்தை எடுத்து சொல்லி அவளை அங்கிருந்து ரைவத மலை அடிவாரத்திற்கு கொண்டு போய் சேர்த்தார்கள்.

தேவலோகம் சென்று யெச்சர், தேவ தேவியர் தெய்வ ரிஷிகளை திருமணம் நடக்கும் இடத்திற்கு வரச் சொல்லி கல்யாண சாப கிரிய திரவிய தேவ துந்துவி முழக்கவும் ஏற்பாடு செய்துவிட்டு கிருஷ்ண பகவானிடம் தெரிவித்தார்கள். அவர் ருக்மணி தேவி சமேதராய் திருமண பந்தலுக்கு எழுந்தருளினர். அங்கே தன் தங்கை சுபத்திரா மருமகன் அபிமன்யு மற்றும் புது பெண் வத்ஸலாவையும் கண்டு குசலம் விசாரித்தான். பகவான் பின்பு ஒரு சில நொடிகளில் வத்ஸாலாவுக்கும் அபிமன்யுவுக்கும் விவாக சுப முகூர்த்தம் நிறைவேறியது. உடனே பகவான் அங்கு தங்காமல் எதையும் தான் அறியாதார் போல் தம் இருப்பிடம் சேர்ந்தார். பலராமன் தன் மகள் வத்ஸாலவை காணாமல் தவித்து கிருஷ்ணரின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். அதற்குப் பின் வத்ஸலா விவாகமான செய்தியை நாரதர் மூலம் பகவான் பலராமருக்கு தெரிவித்தார். அதனால் பலராமர் அகமகிழ்ந்து அபிமன்யு வத்ஸலாவை தன் அரண்மனைக்கு திருமண ஊர்வலம் ஆக நாத தந்துபிகள் முழங்க வெகு விமர்சையாக அழைத்து வந்தார். இவ்வாறு பலராமன் மகள் வத்ஸாலா திருமணம் இனிதே நிறைவேறியது. இந்த வத்ஸலா திருமணக் கதையை கேட்போர் படிப்போர் அனைவருக்கும் கிருஷ்ண பரமாத்மாவின் பூரண அனுக்கிரகமும் சர்வ மங்களமும் கிடைக்கும் எனப்படுகிறது.

பலராமன் தீர்த்த யாத்திரை:-

பலராமன் கிருஷ்ணரின் அண்ணனும் விஷ்ணுவின் அவதாரங்களில் எட்டாவது அவதாரங்களில் எட்டாவது உருவமும் ஆக பலராமர் குருசேத்திர போர் வருவதற்கு முன் தர்ம சங்கடமான சூழ்நிலையை தவிர்க்க நாடு முழுவதும் பல தீர்த்த யாத்திரை ஸ்தலங்களுக்கு சென்றார். இந்த யாத்திரையின் போது பல தலங்களில் நீராடியதோடு பல்வாழனை கொன்று பிராமணர்களுக்கு உதவினார். பலராம அவதாரத்தின் முக்கியத்துவமாக விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவராகவும் காளையின் வடிவமாகவும் கருதப்படுகிறார். விவசாயம் உழவுத் தொழிலில் உருவமாகவும் பலராமர் கொண்டாடப்படுகிறார். பலராமரின் இந்த தீர்த்த யாத்திரை தர்மத்தை கடைபிடித்து உறவினர்களுக்கு இடையே நடைபெறும் போரிலிருந்து விலகி ஆன்மீக மற்றும் அறச்செயல்களில் ஈடுபடுவதற்கான ஒரு முயற்சியாக அமைந்தது. இவ்வாறு பலராமர் அவதாரம் நிறைவடைந்தது.

 

 -பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.