17 ஆண்டுகளுக்கு பிறகு பணி நீக்கம்! சர்ச்சையில் வங்கி!
இந்தியர் இல்லை என்பதல் 17 ஆண்டுகளாக பணியாற்றிய ஊழியரை பணி நீக்கம் செய்த எஸ்.பி.ஐ. வங்கியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
சிறுவயதிலேயே இலங்கையில் இருந்து அகதியாக தமிழ்நாடு வந்த திருக்கல்யாணமலர் என்பவர் கடந்த 2008ம் ஆண்டு எஸ்.பி.ஐ. வங்கியில் பணிக்குச் சேர்ந்துள்ளார்.
பணியில் சேரும்போது விண்ணப்பத்தில் குடியுரிமை தொடர்பாக எந்த விபரங்களும் கேட்கப்படாத நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு பணி நீக்கம் செய்துள்ளது சரியான நடவடிக்கை அல்ல எனக்கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு.
மனுவை இன்று விசாரித்த நீதிபதி, “மனுதாரர் பணியில் சேரும்போது இலங்கை அகதி என்பதை மறைக்கவில்லை. 17 ஆண்டுகளாக எந்தப் பிரச்னையும் இல்லாத நிலையில் தற்போது பணி நீக்கம் செய்துள்ளதை ஏற்க முடியாது, இது அவரின் குடும்பத்தினரை பாதிக்கும்.
அரசியலமைப்பு சட்டம் இந்திய குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட சில உரிமைகளைத் தவிர, வாழ்வுரிமை அடிப்படையில் இந்திய குடிமக்களுக்கு இணையாக அதிகளாக வந்தோரும் உரிமை கோரலாம் எனக்கூறி பணி நீக்க உத்தரவை ரத்து செய்தார்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.