முழுக்கடனை கட்டிய பிறகும் அசல் ஆவணங்களை தராமல் அலைக்கழிக்கும் தேவாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி !
தேவாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய அசல் மற்றும் வட்டியை கட்டிய பிறகும் அசல் ஆவணங்களை தர மூன்று மாதங்கள் வரையில் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, தேவாரம் சிஎஸ்ஐ தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி சகாய பரிமளா, இவர் சொத்தை அடமானமாக வைத்து 2013 ஆம் ஆண்டு தேவாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அரை ஏக்கர் நிலத்தை அடமானமாக வைத்து 4.70 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வங்கியில் இருந்து 13.60 இலட்ச ரூபாய் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பினர். பின்னர் கடனை 9.70 இலட்ச ரூபாய் கட்டினால் போதும் என்று தெரிவித்தனர்.
மேலும் உடனடியாக உங்கள் கடன் முழுவதும் தள்ளுபடி செய்து அசல் ஆவணங்களை தருவதாக தெரிவித்தனர். கடனை கட்டிய பிறகும் அசல் ஆவணங்களை தர தொடர்ந்து தேவாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகம் மூன்று மாதங்களாக மறுத்து வருகிறது.
இது குறித்து தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங்கிடம் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
— ஜெய்ஸ்ரீராம்