வலசை சென்று திருப்பத்தூரை திரும்பி பார்க்க வைத்த பாரண்டப்பள்ளி மக்கள் !!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வன உயிரினங்களைப் போலவே வலசை சென்று – திருப்பத்தூரை திரும்பி பார்க்க வைத்த பாரண்டப்பள்ளி மக்கள் !! குறிப்பிட்ட காலங்களில் விலங்குகள் பறவைகள் தங்களின் வாழ்விடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக இடம் பெயர்வதை “வலசை போதல்” என்பார்கள். அந்த வகையில் மனிதர்களும் வலசை செல்வதை கேள்விப்பட்டு சம்பந்தப்பட்ட கிராமத்தை சென்றடைந்தோம்.

கடைகள் அடைத்து வெறிச்சோடி
கடைகள் அடைத்து வெறிச்சோடி

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

அங்குள்ள வீடுகள் கடைகள் அடைத்து வெறிச்சோடி காணப்பட்டது. ஊர் மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு அருகில் இருக்கும் தோப்பில் குடியேறி ஒவ்வொரு மரங்களைச் சுற்றிலும் கூட்டம் கூட்டமாக அமர்ந்து சமைத்து சாப்பிட்டு ஆடி பாடி பொழுதைக் கழித்து நிறைவாக, மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகிறார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம், கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் சமத்துவபுரம் மிக அருகே அமைந்துள்ளது பாரண்டப்பள்ளி கிராமம். இங்கு 300 – க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

விலங்குகள் பறவைகள் வலசை போதல் போலவே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வலசை போதல் என்னும் சம்பிரதாய நிகழ்வினை இவ்வூர் மக்கள் கடைப்பிடித்து திருப்பத்தூரை திரும்பி பார்க்க வைத்துள்ளார்கள்.

கடைகள் அடைத்து வெறிச்சோடி
கடைகள் அடைத்து வெறிச்சோடி

இங்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாரியம்மன், சாமூண்டிஸ்வரி பண்டிகையின் போது கரகம் பாலிக்கும் நிகழ்ச்சியோடு, தொடங்கும் திருவிழாவிற்கு பத்து நாட்களுக்கு முன்பாக, இங்குள்ள மக்கள் அனைவரும் ஒன்று கூடி காலை 7 மணியளவில் தங்கள் வீடுகள், கடைகளை பூட்டிக்கொண்டு மேள தாளம் முழங்க, ஊருக்கு அருகில் இருக்கும் மாந்தோப்பு, புளியந்தோப்பு போன்ற இடங்களில் குடும்பம் குடும்பமாக குடியேறியினர்.

ஒன்றாக சமைத்து உற்றார் உறவினர்களுக்கு விருந்தளித்து; மாலை 4 மணிக்கு தங்களது “வலசை போதல்” சம்பிரதாயத்தை முடித்துக் கொண்டு மீண்டும் மேள தாளம் முழங்க ஆடி பாடி தங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் சாமூண்டிஸ்வரி கோவில்களுக்கு சென்றனர்.

குடும்பத்தினர் அனைவரும்
குடும்பத்தினர் அனைவரும்

”குலம் தலைத்தோங்க வேண்டிக்கொண்டும் மும்மாரி மழை பொழிய வேண்டும்; விவசாயம் செழிக்க வேண்டும்” என வேண்டுதலோடு அவரவர்களின் பூட்டிய வீட்டுக்குள் நுழைந்து அடுத்த 15 ந்தேதி தொடங்கும் மூன்று நாள் திருவிழாவிற்கு தாயார் படுத்திக் கொள்ள ஆயத்தமாகி வருகிறோம்” என்கிறார்கள் பாரண்டப்பள்ளி , ஊர் முக்கியஸ்தர்களான ராமு, அரங்கநாதன், கிருஷ்ணன் ஆகியோர்.

சாதி மத பேதமின்றி ஒன்று கூடி
சாதி மத பேதமின்றி ஒன்று கூடி

இது குறித்து ஊர் கவுண்டர் கோவிந்தராஜிடம் பேசினோம். “எங்கள் பாரண்டப்பள்ளி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு 14- க்கும் மேற்பட்ட பிரிவினர்கள் இருகிறார்கள். இந்து இஸ்லாம் கிருஸ்துவ மதத்தினரும் சாதிமத பேதமின்றி அண்ணன் தம்பி போல வாழ்ந்து வருகிறோம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஆடிமாதம் செவ்வாய் ,புதன் கிழமைகளில் இரண்டு நாட்கள் மட்டும் திருவிழா நடப்பது வழக்கம். ஆனால், ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மூன்று நாள் திருவிழாவில் சிறப்பு நிகழ்வாக கரகம் எடுப்போம்.

குடும்பம் குடும்பமாக அனைவரும் மரத்தின் கீழ்
குடும்பம் குடும்பமாக அனைவரும் மரத்தின் கீழ்

அதை முன்னிட்டு “வலசை போதல்” என்னும் சம்பிரதாயத்தை காலம்காலமாக கடைப்பிடித்து வருகிறோம். இந்த வலசை போதல் நிகழ்வில் சாதி மத வேறுபாடின்றி பங்கெடுப்பதால் ஊர் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுகிறது.

இங்கிருந்தபடியே சைவம் அசைவம் என விதவிதமாக உணவுகளை சமைக்கும் போது வெளிப்படும் புகையானது எங்கள் குடியிருப்புகளில் படர்வதால் ஊரில் உள்ள துஷ்ட சக்திகள் விலகி, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சிரமமின்றி வாழ்வோம் என்பதும் எங்கள் நம்பிக்கை. மேலும், உணவுகளை சமைத்து உற்றார் உறவினர்களோடு உண்டு மகிழ்ந்து, ஆடிபாடி வீடு திரும்பும்போது பகை மறந்து புதிய உறவுகளோடு திரும்புகிறோம்” என்கிறார் பூரிப்புடன்.

“இந்த வலசை வந்த சம்பிரதாயம் என்னை போன்ற இளைய தலைமுறையினருக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. நான் வலசை வந்த நிகழ்வானது எனக்கு இராண்டாவது முறை. இங்கு சாதி மத பேதமின்றி ஒன்று கூடி மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஒன்றாக சமைத்து சாப்பிட்டு ஆடி பாடி மகிழ்ந்தோம்.

சாதி மத பேதமின்றி ஒன்று கூடி
சாதி மத பேதமின்றி ஒன்று கூடி

இந்த சம்பிரதாயத்தை எங்கள் தலைமுறையினரும் கடைப்பிடிப்போம். அடுத்தடுத்து வரும் சந்ததினருக்கும் சொல்லிக் கொடுப்போம்” என்கிறார், வலசை வந்த இளைய தலைமுறையினரான வரலட்சுமி.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் ஆற்றல் பிரவின்குமார் கூறுகையில், “பருவ நிலை மாறுதலுக்காகவும்; உணவு தேடியும் வன உயிரினங்கள் இடம் விட்டு இன்னொரு இடம் பெயர்வதை வலசை போதல் என்கிறோம். மனிதர்களும் வலசை போதல் என்பதை கேள்விப்படும்போது, மகிழ்சியாக இருக்கிறது.

அதுவும் நம்ம ஊர் அருகில் இந்த நிகழ்வு நடப்பது பிரமிப்பாக உள்ளது. பகல் முழுவதும் சாதி மத பேதமின்றி ஒன்று கூடி உண்டு மகிழ்வதை வலசை போதல் என்பதைக் காட்டிலும் பகை மறந்து ஊர் ஒற்றுமையாக இருப்பதை காட்டுகிறது. தமிழ்நாடு விவசாய மக்களால் சூழப்பட்ட பூமி.

சாதி மத பேதமின்றி ஒன்று கூடி
சாதி மத பேதமின்றி ஒன்று கூடி

வலசை போதல் மனிதர்களுக்கும் பொருந்தும். எனவே, நாடு முழுவதும் உள்ள மக்கள் பாரண்டப்பள்ளி மக்கள் கடைபிடிக்கும் வலசை போதல் நிகழ்வினை கடைபிடிக்க வேண்டும். மேலும், இது ஒரு சமூக நல்லிணக்கத்தை உண்டாக்கும்.” என்கிறார்.

உயிரினங்களைப்போல மனிதர்களும் வலசைப்போதல் என்பதைக் காட்டிலும்; இந்துக்கள் முன்னெடுக்கும் இந்நிகழ்வில் இதயப்பூர்வமாக இஸ்லாம், கிருஸ்துவ சமூகத்தினரும் பங்கெடுக்கிறார்கள் என்ற தகவல் நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. தமிழகத்தின் தனிச்சிறப்பை எடுத்துக் காட்டுகிறது.

– மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.