அடிப்படை வசதிகள் வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம்!
திருவானைக்காவலில் கோவிலை சுற்றி உள்ள மேல விபூதி பிரகாரம், எடத்தெரு, தம்பிரான் தெரு மற்றும் சுற்றியுள்ள தெருக்களில் பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் கீழ கொண்டயம்பேட்டை பைபாஸ் செல்லும் பாதையில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் சாலையில் ஆறு போல் ஒடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்க பாதாள சாக்கடை அடைப்பை உடனே சரி செய்ய வேண்டும்.தெற்கு ஐந்தாம் பிரகாரம் பகுதியில் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி செய்த தர வேண்டும். திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு கருணா நகர், ஸ்ரீநகர் சந்திக்கக்கூடிய மெயின் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்ஸ் திருவரங்கம் பகுதிக்குழு சார்பில் இன்று திருவானைக்காவல் நாலுகால் மண்டபம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் ஆட்டோ ராஜா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாநகர் மாவட்ட செயலாளர் கோவி.வெற்றிச் செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், சந்தானம், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, பகுதிக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, செந்தில்குமார் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.