மணல் திருட்டால் 1 கோடிக்கு மேல் இழப்பு – வட்டாட்சியர் மீது பாஜக குற்றச்சாட்டு!
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றிய பாஜக ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து பாஜக நிர்வாகியை அங்குசம் செய்தி தொடர்பு கொண்டது, அவர் கூறியது, புள்ளம்பாடி மேலரசூர் கிராமம் சின்ன ஏரியில் மணல் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் வட்டாட்சியருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய பாஜக சார்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 1.6.2021 அன்று பொதுமக்கள் முன்னிலையில் நேரில் சென்று மணல் திருட்டு நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. அதற்கு பிறகு கூட இன்று வரை நடவடிக்கை இல்லை.
தமிழ்நாடு அரசு நிதி சுமையால் தத்தளித்து வருகிறது என்று அரசாங்கமே கூறி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு அரசுத் திட்டங்கள் நடைபெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதற்கு லால்குடி வட்டாட்சியர் உடந்தையாக இருக்கிறார், அவருக்கு தெரிந்தே முறைகேடுகள் நடைபெறுகிறது என்று பாஜக நிர்வாகிகள் கூறினர்.
தொடர்பாக லால்குடி பகுதி முழுவதும் பாஜக புள்ளம்பாடி ஒன்றியத்தின் சார்பில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டிருக்கிறது.