”Body Shaming” சத்தமில்லாத வன்முறையா ?
பெண் உடலை கேள்விக்குறி செய்யும் பார்வைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் .கௌரி கிஷன் சம்பவம் பேச வேண்டிய முக்கியப் பாடம்.
சமீபத்தில் “அதர்ஸ்” திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கௌரி கிஷன் மீது கேட்கப்பட்ட ஒரு கேள்வி .
அதே அளவுக்கு ஆழமான அதிர்வை ஏற்படுத்தியது.
ஒரு யூடியூப் பத்திரிகையாளர், கௌரியிடம் “உங்க வெயிட் என்ன?” என்று கேட்டார்.
உடல், எடை, தோற்றம் இவை ஒரு பெண்ணின் அத்தாட்சிப்பத்திரம் அல்ல. அவளது கலை, கண்ணியம், உழைப்பு அவளது உண்மையான அடையாளம்.
கௌரி அமைதியாக அந்த கேள்விக்கு எதிர்த்து நின்றார்.
அது துணிவின் குரல்.
அது மரியாதைக்கான குரல்.
ஆனால் அதே நொடியில்,
அங்கிருந்த சிலர் கூட அந்த அநியாயத்தை உணரவில்லை.
“இது ஒரு சாதாரண கேள்வி தான்” என்ற மனநிலைதான் அதிகமாக தெரிந்தது.
நடிகர் சங்கத்தின் வலுவான கண்டனம் :
தமிழ் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் வெளியிட்ட அறிக்கை மிகத் தெளிவானது.
“திரை உலகமும் ஊடகமும் இணைந்த உறவுகள். ஆனால் பெண்கள் மீது அவமதிப்பு, நசுக்கல், நையாண்டி இவற்றுக்கு இடமில்லை. இது தனி மனித தவறு அல்ல; முழு துறைக்கே களங்கம்.”
சமூக ஊடக வளர்ச்சி காரணமாக யாரும் மைகை பிடித்தால் பத்திரிகையாளர் ஆகும் சூழல் உருவாகியிருப்பதை அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய நடைமுறைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
கௌரியின் அதிகாரபூர்வ அறிக்கை “இந்த மரியாதையின்மை முடிவடைய வேண்டும்”
கௌரி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கை மிக நிதானமானது, நாகரிகமானது, ஆனால் தீவிரமான செய்தியை கொண்டது:
“ஒரு நடிகையாய் நான் ஆய்வு செய்யப்படும் மனிதர் என்பதில் எனக்கு பிரச்சினையில்லை. ஆனால் ஒரு மனிதரின் உடல், தோற்றம் குறித்து கேள்வி கேட்பது எந்த சூழலிலும் சரி அல்ல. அப்படிப்பட்ட கேள்விகள் பெண்களுக்கு விதிக்கப்பட்ட புரளி அழகு நெறிகளை மீண்டும் மீண்டும் உருவாக்குகின்றன.”
“நான் அங்கே என் திரைப்படத்தைப் பற்றி பேச வந்திருந்தேன். என் உடலைப் பற்றி அல்ல.”
“யாராவது காயப்படும்போது, நாம் பேசலாம். நம் வருத்தத்தை வெளிப்படுத்தலாம். இது வெறுப்பையும் பழிச் சுமத்தலையும் உருவாக்க அல்ல; மரியாதை மற்றும் உணர்வுப்பூர்வமான உரையாடலை உருவாக்க.”
அவர் இறுதியில் நன்றி கூறினார்.
“என்னை ஆதரித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”
அவர் கூறிய மிக முக்கியமான வாக்கியம்
“என் உடலுடன் என்ன செய்வது என்பது எனது முடிவு. இதை நிறுத்தவேண்டும். இது சரியல்ல.”
ஒரே ஒரு வாக்கியம்.
என் பார்வை Body Shaming என்பது சத்தமில்லாத வன்முறை
உடம்பு பற்றி பேசுவது
அழகு பற்றி அளவிடுவது
ஒப்பிட்டு விமர்சிப்பது
இவை எல்லாம் சாதாரண பேச்சு அல்ல.
அது ஒருவரின்
நம்பிக்கையை உடைக்கும்,
தன்னம்பிக்கையை நசுக்கும்
அமைதியான வன்முறை.
பெரும்பாலும் பெண்கள் இதை
சிரித்து கடந்து விடுவோம்,
பரவாயில்லை, ஆழமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று தங்கள் மனதை சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள்.
அதே சமயம், அந்த ஒரு வார்த்தை அவர்களுக்குள் ஆழமாக காயம் வைக்கிறது.
மிகவும் ஆழமாக.
ஒரு பெண்ணின் உடல் குறித்த கருத்து சொல்லும் உரிமை எவருக்கும் இல்லை.
அவர்களின் திறமை, உழைப்பு, கலை அதுவே அவர்களின் அடையாளம்.
கௌரி சொன்னது “எனக்கு மட்டும் அல்ல மற்ற எல்லா பெண்களுக்கும்.”
அந்த குரல் நமக்கெல்லாம் ஒரு விழிப்புணர்வு:
மரியாதை என்பது தோற்றத்திற்கு அல்ல, மனிதத்துக்கு.
அது நம்மால் தொடங்க வேண்டும்.
இங்கே.
இப்போதே.
— மதுமிதா








Comments are closed, but trackbacks and pingbacks are open.