சமையல் குறிப்பு – பாம்பே இஞ்சி பக்கோடா…
வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு நான் கொண்டு வந்து இருக்கிறது புது விதமான ஒரு ஸ்னாக்ஸ் பாம்பே இஞ்சி பக்கோடா. நல்லா கிரன்சியா மொறு மொறுன்னு செய்யப் போறோம். வாங்க எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வெண்ணெய் 100 கிராம், உப்பு தேவையான அளவு ,மைதா 3 கப், பேக்கிங் சோடா அரை ஸ்பூன், பச்சை மிளகாய் 6 பொடியாக நறுக்கியது, இஞ்சி பொடி பொடியாக நறுக்கியது ஒரு ஸ்பூன், முந்திரி ஒரு கப், எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
ஒரு அகலமான தட்டில் ஒரு கப் வெண்ணெய் ஊற்றி அதில் சிறிது உப்பு சேர்த்து கைகளால் நன்கு பிசையவும். அதன் பின் மைதா, பேக்கிங் சோடா, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து தண்ணீர் ஊற்றி பூரி மாவு பிசைவது போல் அல்லாமல் சிறிது கெட்டி பதம் கம்மியாக பிசையவும். அதில் ஒரு கப் முந்திரி சேர்த்து பிசைந்து எண்ணெய் காய்ந்ததும் கிள்ளிப்போட்டு ஒவ்வொரு கிள்ளிலும் முந்திரி இருக்கும்படியாக கிள்ளிப்போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்தால் பாம்பே இஞ்சி பக்கோடா தயார். இதனை டொமேட்டோ சாஸ் உடன் சூடாக சுவைத்து மகிழுங்கள்.
— பா. பத்மாவதி
 
			 
											







Comments are closed, but trackbacks and pingbacks are open.