அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற நூல்கள் வெளியீட்டு விழா !

திருச்சியில் அடகு நகையை விற்க

இந்நிகழ்வில் பேரா கி. சதீஷ் குமரன் என்கிற கவிஞர் ஆநிறைசெல்வன் அவர்களின் “தாடி முளைத்த நெடும்பனை “கவிதை நூல் மற்றும் ஆங்கரை பைரவி அவர்களின் “தனிமை நேரத்து தூண்டில்காரன்” கவிதைத் தொகுப்பு மற்றும் கோணவாச்சி சிறுகதை தொகுப்பும் வெளியிடப்பட்டது. நிகழ்வில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற   மாவட்டத் தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் செல்வராஜ் அவர்கள் கவிஞர் ஆநிறை செல்வன் எழுதிய தாடி முளைத்த நெடும் பனை நூலினை வெளியிட்டார் . சிறார் செயற்பாட்டாளர், எழுத்தாளர் திருமதி. கார்த்திகா கவின் குமார் அவர்கள்  நூலினைப் பெற்றார். தோழர் இந்திரஜித் அவர்கள் கவிஞர் ஆங்கரை பைரவி எழுதிய தனிமை நேரத்து துண்டில்காரன் கவிதை நூலை வெளியிட்டார். திருமிகு சௌமா இராஜரத்தினம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

நூல்கள் வெளியீட்டு விழா !கோணவாச்சி சிறுகதை நூல் , எழுத்தாளர் திரு. குமாரசெல்வா வெளியிட நூலினை யுவபுரஸ்கார்  விருதாளர் தோழர் பாலபாரதி பெற்றுக் கொண்டார். தாடி முளைத்த நெடும் பனை கவிதை நூல் குறித்து  மேனாள் வட்டாரக் கல்வி அலுவலர் முனைவர் ஜெயலட்சுமி அவர்கள் மதிப்புரை வழங்கினார். தனிமை நேரத்து தூண்டில்காரன் கவிதை நூல் குறித்து கவிஞர் துவாரகா சாமிநாதன் மதிப்புரை வழங்கினார். கோணவாச்சி சிறுகதை நூல் குறித்து எழுத்தாளர் குமார செல்வா அவர்கள் மதிப்புரை வழங்கினார்கள்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நிகழ்வில் மாணவப் பேச்சாளர்கள் செல்வி .மகாலட்சுமி கணபதி, சுஜாதாசஞ்சய் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பால புரஷ்கார் விருதாளர் தோழர் பாலபாரதி வாழ்த்துரை வழங்கினார். தோழர் எம். செல்வராஜ் தோழர் இந்திரஜித் சௌமா இராஜ ரத்தினம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  நூலாசிரியர்கள் நிறைவாக ஏற்புரை வழங்கினர்.

நூல்கள் வெளியீட்டு விழா !நிகழ்வை கவிஞர் கோ. கலியமூர்த்தி அவர்கள் மிகச் சிறப்பாக தொகுத்து சரியான நேரத்தில் நிறைவு செய்து ஒருங்கிணைத்தார். அரங்கம் நிறைந்த தோழர்கள் படைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் இளைய தலைமுறை மாணவர்கள்  ஆகியோர்  பங்கேற்றனர்.

முதல்வர் பிறந்தநாள்

நிகழ்வில் பாரதி கலைக்குழு தோழர் காந்தி   மக்களிசை பாடல்களைப் பாடி தோழர் ஈகவரசன் அவர்கள் தமிழிசைப் பாடல்களைப் பாடி நிகழ்வை செம்மையாக்கினர். தமுஎகச தோழர்கள் வழக்கறிஞர் ரங்கராஜன் கவிஞர் இளங்குமரன் தோழர் சீத்தா வெங்கடேஷ், மற்றும் தோழர் பாட்டாளி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.