மாணவன் – மாணவி – பள்ளியிலேயே திருமணம் – குளித்தலை அதிர்ச்சி !
பிளஸ் டூ மாணவன் மாணவி இருவரும் பள்ளியிலேயே திருமணம் – குளித்தலை அதிர்ச்சி ! குளித்தலை அருகே தோகைமலை அருகே உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் மாணவன் மாணவி இருவரும் பள்ளியிலேயே திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்.
தோகைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தோகைமலை பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவ மாணவி இருவரும் தோகமலையில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்த இருவரும் பள்ளியிலேயே திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பிளஸ் டூ மாணவன் பள்ளி சீருடையிலும், மாணவி மஞ்சள் கிழங்குடன் தாலி அணிந்த நிலையில் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் விசாரணையில் சம்மந்தப்பட்ட மாணவி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணவில்லை என்று பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது உள்ளது என்றும், இது குறித்து போலீஸ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்தவர்களை தேடி கண்டுபிடித்து அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
-நௌஷாத்
சிறந்த மாணவர், மாணவி. அவர்களுக்கு தொந்தரவு, துன்பம் கொடுக்காமல் வாழ்க, வாழ்க என வாழ்த்துங்கள். இந்த செய்தியை துயர செய்தி, அதிர்ச்சி செய்தி என கட்டம் கட்டி அடிக்க வேண்டாம். இல்லற வாழ்வில் அடி எடுத்து வைத்து விட்டார்கள், சிக்கல் ஜாதி வேறு என்பது, இப்படி பல சிக்கல்களில் உள்ளவர்களை கட்டம் கட்டி அடிக்காமல் வாழ்த்துவோம். பாடங்கள், மனனம்,அதில் எழுத்து தேர்வு என பள்ளி கல்வி தரும் புரிதல் என்ன? இயற்கை தரும் பள்ளியறை கல்வி வேண்டும் என்று சேர்ந்து உள்ளார்கள்.அதுவும் வாழ்க்கை பற்றிய புரிதல் தரும்.