அங்குசம் சேனலில் இணைய

திருச்சி போலிஸ் கமிஷனர் அதிரடி சோதனையில் ஸ்ரீரங்கம் வீட்டில் சிக்கிய மதுபாட்டில்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி போலிஸ் கமிஷனர் அதிரடி சோதனையில் ஸ்ரீரங்கம் வீட்டில் சிக்கிய மதுபாட்டில்கள் !

திருச்சி மாநகர  போலிஸ் கமிஷ்னர் நேரடி சோதனையில் ஸ்ரீரங்கம் காவல் சரக மேலூரில் கள்ளசந்தையில் அரசு மதுபானம் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த நபரின் வீட்டிலிருந்து அரசு மதுபானம் கைப்பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தமிழக முதல்வர் உத்தரவின் பேரிலும், தமிழக காவல்துறை இயக்குநர் அறிவுறுத்தலின் பேரிலும் தமிழகம் முழுவதும் கள்ளசாராயம், போலி மதுபானம் தயாரித்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக இன்று ( 17.05.23 ) திருச்சி மாநகர போலிஸ் கமிஷனர்  திருமதி.ஆ.சத்திய பிரியா, திருச்சி  மாநகரம் ஸ்ரீரங்கம் காவல் சரகம் மேலூர் கிராமம் வடக்கு தெரு, கிழக்கு தெரு, கொள்ளிடக்கரை மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா பகுதிகளில் நேரடியாக மதுவிலக்கு வேட்டை மேற்கொண்டார்கள்.

மேற்படி மதுவிலக்கு வேட்டை சோதனையின்போது மேலூர் வடக்கு தெருவில் வசித்து வரும் மருதமுத்து மகன் பிரபு என்பவரின் வீட்டில் கள்ள சந்தையில்  விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை கண்டுபிடித்து கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

தங்கபொண்ணு என்கிற மூதாட்டி
தங்கபொண்ணு என்கிற மூதாட்டி

மேலும் அப்பகுதியில் ஏற்கனவே கள்ள சந்தையில் மதுபானம் விற்று வந்த தங்கபொண்ணு என்கிற மூதாட்டிக்கு கள்ளசந்தையில் மதுபானம் விற்க கூடாது என்றும் வாழ்வாதாரத்திற்கு வேண்டிய உதவிகள் செய்வதாகவும் அறிவுரைகள் வழங்கினார்கள்.

கடந்த 4 நாட்களாக திருச்சி மாநகரத்தில்  அனைத்து காவல் அதிகாரிகளும் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தியதில், கள்ளசந்தையில் அரசு மதுபானங்களை விற்பனை செய்ததாகவும், விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாகவும் 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்குகளில் சம்மந்தப்பட்ட 78 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி 78 எதிரிகளிடமிருந்து  605 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

திருச்சி மாநகரில் இதுபோன்ற கள்ளசாராயம், போலி மதுபானம் மற்றும் கள்ளசந்தையில் மதுபானம் விற்பனையில்  ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.