சமையல் குறிப்பு: பிரட் பீட்சா

வணக்கம் சமையலறை சகோதரிகளே! இந்த குட்டி பசங்க இருக்கிற வீட்ல தினமும் சாயங்காலம் ஸ்கூல் விட்டு வர டைம் நமக்கு கொஞ்சம் கஷ்டம் தாங்க. ஆமா தானே நான் சொல்றது. அவங்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் என்ன செஞ்சு தரதுன்னு யோசிச்சு யோசிச்சு நமக்கு கொறஞ்சி இருக்கிற பீபி கூட அதிகமாயிடும். இனி அந்த கவலை வேண்டாம். தினம் ஒரு ரெசிபி நம்ப ஸ்கூல் பசங்களுக்காகவே வாங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

மில்க் பிரட் அல்லது பீட்சா பிரட் 2 துண்டுகள், ஸ்வீட் கான் ஒரு கப், கேப்சிகம் (சிவப்பு மற்றும் பச்சை)ஒன்று நறுக்கியது, பன்னீர் துருவியது ஒரு கப், கிரீன் சாஸ் தேவையான அளவு, டொமேட்டோ சாஸ் தேவையான அளவு, மொஸ்ரெல்லா சீஸ் தேவையான அளவு, நெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, ஆரிகேனோ தேவையான அளவு, சில்லி பிளேக்ஸ் தேவையான அளவு.

செய்முறை:-

ஒரு தவாவில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் துருவிய பன்னீர், கலர் கேப்சிகம் ஸ்வீட் கான், சில்லி பிளேக்ஸ் ஆரிகேனோ பவுடர், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், பின்பு அதே தவாவில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து இரண்டு பிரட் துண்டுகளை வைக்கவும். அதன் மேல் கிரீன் சாஸ் மற்றும் டொமேட்டோ சாஸ் சேர்த்து ஸ்பிரட் செய்யவும். பின் நாம் தயார் செய்து வைத்த ஸ்டஃபிங்க்ஸ்சை பிரட்டின் மேல் ஸ்பிரட் செய்யவும். துருவிய மொஸ்ரெல்லா சீஸ்சை அதன் மேல் தூவி ஆரிகேனோ பவுடர், சில்லி பிளேக்ஸ் தூவி தவா மூடி போட்டு ஐந்து நிமிடம் மிதமான சூட்டில் வேக விடவும். இப்போது சுவையான மனம் கவரும் பிரட் பீட்சா குழந்தைகளுக்கு தயார். இதனை இரண்டு துண்டுகளாக கட் செய்து சூடாக ஒரு தட்டில் வைத்து சிறிய பவுலில் கிரீன் சாஸ் அல்லது டொமேட்டோ சாஸ் வைத்து குழந்தைகளுக்கு பரிமாறவும். குழந்தைகள் ஆனந்தமாகவும், குதுகளிப்புடனும் சுவைத்து மகிழ்வார்கள்.

 

—   பா. பத்மாவதி

Comments are closed, but trackbacks and pingbacks are open.