அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பட்டியலின உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் ! பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

ட்டியலின உள் ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை பெங்களூருவில் நடந்த கருத்தரங்கில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பண்டிதர் பதிப்பகம், வணங்காமுடி இயக்கம், அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம் ஆகிய அமைப்பினர் இணைந்து அக்-09 அன்று பெங்களூருவில் உள்ள தமிழ்ச் சங்கத்தில்  நடைபெற்ற பட்டியலின உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்தரங்கம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த கருத்தரங்கில் பெங்களூரு, தங்கவயலை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தை சேர்ந்தவர்களும் கணிசமாக கலந்துகொண்டனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

கருத்தரங்கம்
கருத்தரங்கம்

பத்திரிகையாளர் இரா.வினோத் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் சமூக செயற்பாட்டாளர் முத்துபிரதீபன் சாக்யா வரவேற்புரையாற்றினார்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

புரட்சியாளர் இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பாவலர் மகிமை தாஸ் எழுச்சி பாடல்களை பாட, சமூக செயற்பாட்டாளர் மேக.பிரவீன் நெறியாளுகை செய்தார். கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் சி.ராசன், கர்நாடக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜே.டி.இளங்கோவன்,

seminar held in Bangaloreமுன்னாள் அதிமுக கர்நாடக மாநில செயலாளர் எஸ்.டி.குமார், பேரா.சி.லட்சுமணன், இந்திய குடியரசு கட்சியின் பொதுச்செயலாளர் மங்காபிள்ளை, கவிஞர் தமிழடியான், எழுத்தாளர் அருள் முத்துக்குமரன், சமூக செயற்பாட்டாளர்கள் நலங்கிள்ளி, தனஞ்செழியன் ஆகியோர் பட்டியலின உள் ஒதுக்கீட்டுக்கு எதிரான உரையாற்றினர்.

”உச்சநீதிமன்றம் அளித்த பட்டியலின உள் ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பை ரத்து செய்யும் மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டுவர வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பட்டியலின மக்களின் இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும். தமிழக அரசு கொண்டுவந்த உள் ஒதுக்கீட்டில் எஸ்சி அருந்ததியர் அடைந்த பயன் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

200 ரோஸ்டர் முறை, அருந்ததியருக்கு முன்னுரிமை ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். தனியார் துறையில் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்” என்பதாக ஐந்து  தீர்மானங்கள் கருத்தரங்கில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

 

– அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.